உங்களுக்கு வந்தால் ரத்தம், ஸ்ரீதேவிக்குன்னா தக்காளி சட்னியா?: நடிகரை விளாசிய நெட்டிசன்

By Siva

மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தன்னை விளாசிய நெட்டிசனுக்கு தக்க பதில் அளித்துள்ளார்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 16 வயதில் மகன் உள்ளார்.

மலாய்காவை காதலிப்பதை அர்ஜுன் அண்மையில் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

காதல்

காதல்

அர்ஜுன் கபூர் மலாய்காவை காதலிப்பது போனி கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் அவர் தனது தந்தையின் பேச்சை கேட்பதாக இல்லையாம். மலாய்காவை திருமணம் செய்யும் ஐடியாவில் உள்ளாராம் அர்ஜுன்.

 நெட்டிசன்

நெட்டிசன்

உங்கள் தந்தை உங்கள் அம்மாவை பிரிந்ததால் அவரின் இரண்டாவது மனைவியை வெறுத்தீர்கள். ஆனால் தற்போது நீங்கள் உங்களை விட 11 வயது பெரிய பெண்ணை காதலிக்கிறீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம் என்று நெட்டிசன் ஒருவர் அர்ஜுன் கபூரிடம் கேள்வி எழுப்பினார். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் அர்ஜுன் பேசியது இல்லை. பேட்டிகளில் ஸ்ரீதேவி பற்றி கேட்டால் அவர் என் தந்தையின் மனைவி அவ்வளவு தான் என்பார். அர்ஜுன் தன் மீது வைத்துள்ள வெறுப்பை நினைத்து ஸ்ரீதேவி கவலைப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தது உண்டு.

அர்ஜுன்

நெட்டிசனின் ட்வீட்டை பார்த்த அர்ஜுன் கபூர், நான் யாரையும் வெறுக்கவில்லை குசும். நான் வெறுத்திருந்தால் முக்கியமான நேரத்தில் என் அப்பா, ஜான்வி, குஷிக்கு ஆதரவாக இருந்திருக்க மாட்டேன். யோசிக்காமல் ஒரு முடிவு செய்து டைப் செய்வது எளிது. வருண் தவானின் புகைப்படத்தை டிபியில் வைத்துக் கொண்டு நெகட்டிவிட்டியை பரப்ப வேண்டாம் என்றார்.

மன்னிப்பு

அர்ஜுனின் பதிலை பார்த்த நெட்டிசன் தனது ட்வீட்டை நீக்கியதுடன் அவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். என் கருத்தை தெரிவித்தேன். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று கூறிய நெட்டிசனை அர்ஜுன் மன்னித்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X