Don't Miss!
- News
ஏ கருப்பா! 6.30 மணிக்கு வண்டியை விட்ட ஓபிஎஸ்.. உள்ளே கேட்ட "வாய்ஸ்".. தீர்ப்புக்கு முன் ஒரே பதற்றம்
- Technology
Jio Phone 5G இம்மாத இறுதியில் அறிமுகமா?., விலை இதுவா இருந்தா, முதல் இந்திய பிராண்ட் இதுதான்!
- Automobiles
உசுரை காப்பாற்றிய டாடா கார்... நன்றி மறவாமல் புதிதாக டாடா தயாரிப்பையே வாங்கிய இளம் நடிகர்...
- Finance
18 வயதில் கோடீஸ்வரர், 22 வயதில் ஜீரோ... ஆனாலும் மனம் தளராத இளைஞர்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும்...
- Sports
சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த ஷிகர் தவான்.. முதல் குறியே கேஎல் ராகுல்.. கேப்டன் பதவியால் கோபம்?
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
மோமோஸ் பிளேட்டால் வந்த வினை.. ட்ரோல் செய்த நெட்டிசனை கெட்ட வார்த்தையால் திட்டிய அர்ஜுன் கபூர்!
மும்பை: வலிமை படத் தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டின் இளம் நாயகனாக வலம் வருகிறார்.
நல்லா கொழு கொழுன்னு இருந்த அர்ஜுன் கபூரை தொடர்ந்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், சமீபத்தில் வொர்க்கவுட் எல்லாம் செய்து செம ஃபிட்டாக மாறிய டிரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோக்களை ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோமோஸ் பிளேட் உடன் அர்ஜுன் கபூர் போட்ட ஒரு போஸ்ட்டை பார்த்து விட்டு நெட்டிசன் ஒருவர் போட்ட மோசமான கமெண்ட் அர்ஜுன் கபூரை ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது.
என்னம்மா லிஸ்ட் நீளமா போகுது...4வது காதலரை அறிமுகம் செய்த எமி ஜாக்சன்

வாரிசு நடிகர்
தமிழில் நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவி மோனா செளரி கபூரின் மகன் தான் அர்ஜுன் கபூர். இரண்டாவதாகத் தான் நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார் போனி கபூர். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஏகப்பட்ட படங்கள்
உதவி இயக்குநராக பாலிவுட்டில் பணியாற்றி வந்த அர்ஜுன் கபூரை கடந்த 2012ம் ஆண்டு இஸாக்ஜாதே திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் செய்தனர். தொடர்ந்து அவுரங்கஸிப், கன் டே, 2 ஸ்டேட்ஸ், ஃபைண்டிங் ஃபேனி, கி அண்ட் கா, ஹாஃப் கேர்ள் ஃபிரெண்ட், பானிபட் என பல படங்களில் அர்ஜுன் கபூர் நடித்துள்ளார்.

மலைகா அரோராவுடன் காதல்
ஷாருக்கானின் உயிரே படத்தில் இடம்பெற்ற 'தக்க தைய்யா' பாடலில் நடனமாடிய கவர்ச்சி கன்னி மலைகா அரோராவுடன் காதலில் விழுந்த அர்ஜுன் கபூர் கடந்த 2016ம் ஆண்டு முதல் அவருடன் பார்ட்னராக திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். மலைகா அரோராவுக்கு 48 வயதாகிறது. அர்ஜுன் கபூருக்கு 36 வயதாகிறது.

வெயிட்டை குறைத்து
நல்ல குண்டா அழகா இருந்த அர்ஜுன் கபூர் திடீரென ஃபிட்டான உடற்கட்டுக்கு மாற வேண்டும் என நினைத்து கடினமாக ஜிம்மிலேயே வொர்க்கவுட் செய்து தற்போது சிக்ஸ் பேக் உடம்புக்கு மாறி ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களையும் தனது ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

மோமோஸால் வந்த வினை
கடந்த 15 மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்த்தான தோற்றத்துக்கு மாறி உள்ள அர்ஜுன் கபூர், சமீபத்தில் மோமோஸ் பிளேட்டுடன் போஸ்ட் ஒன்று போட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் அர்ஜுன் கபூரின் ஜிம் டிரைனரான ட்ரூ நீல் என்பவரை டேக் செய்து நீங்க பட்ட கஷ்டமெல்லாம் வேஸ்ட்டா போச்சு, அர்ஜுன் கபூர் எப்பவுமே ஃபிட்டாக மாட்டார் அவருக்கு அறிவே இல்லை என எல்லை மீறி ட்ரோல் செய்துள்ளார்.

திட்டித் தீர்த்த அர்ஜுன் கபூர்
உடனடியாக கோபம் மண்டைக்கு ஏறிய நிலையில், உங்கள் டிஸ்பிளே பிக்சரில் வைக்கும் படமாக நாங்கள் எப்போதுமே சிக்ஸ்பேக் உடன் இருக்க வேண்டுமா? என கேட்டு கெட்ட வார்த்தையால் அந்த நெட்டிசனை திட்டித் தீர்த்துள்ளார் அர்ஜுன் கபூர். உடல் ஆரோக்கியத்தை எப்படி பேண வேண்டும் என எங்களுக்குத் தெரியும், நீங்க ஒண்ணும் கிளாஸ் எடுக்க வேண்டாம் என வெளுத்து வாங்கி உள்ளார்.