50 வயதில் மணிரத்னம் பட நடிகை கர்ப்பமா? துணிவு தயாரிப்பாளர் வீட்டில் வாரிசு வரப்போகுதா? உண்மை என்ன?

சென்னை: துணிவு படத் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் 50 வயதை நெருங்கியுள்ள நடிகை மலைகா அரோராவை காதலித்து வரும் நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்ற "தக்க தையா.. தையா" பாடலில் குத்தாட்டம் போட்டவர் நடிகை மலைகா அரோரா.

ஏற்கனவே திருமணம் ஆகி வாலிப வயதில் மகன் உள்ள நிலையில், இளம் நடிகரான அர்ஜுன் கபூர் உடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை மலைகா அரோரா வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

போனி கபூர் மருமகள்

போனி கபூர் மருமகள்

துணிவு படத்தை தயாரித்து வரும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை பாலிவுட் நடிகை மலைகா அரோரா காதலித்து வருகிறார். சினிமா பிரபலங்கள் தொடர்ந்து திருமணம் செய்து வரும் நிலையில், அர்ஜுன் கபூர் மற்றும் மலைகா அரோரா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வலம் வந்த நிலையில், தற்போது அதை விட அதிர்ச்சியளிக்கும் ஒரு விஷயம் பாலிவுட் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மலைகா அரோரா கர்ப்பமா

மலைகா அரோரா கர்ப்பமா

49 வயதை கடந்து 50 வயதை நெருங்க உள்ள பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோரா தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இந்நிலையில், அர்ஜுன் கபூருக்கும் மலைகா அரோராவுக்கும் வாரிசு வரப் போவதாகவும், மலைகா கர்ப்பமாக இருப்பதாகவும் பாலிவுட்டில் பெரும் பேச்சு கிளம்பியது.

அர்ஜுன் கபூர் ஆவேசம்

அர்ஜுன் கபூர் ஆவேசம்

மணிரத்னத்தின் உயிரே படத்தில் நடனமாடிய மலைகா அரோரா இந்த வயதில் கர்ப்பமாகி விட்டார் என பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், அதை அறிந்த நடிகர் அர்ஜுன் கபூர் ரொம்பவே ஆவேசம் அடைந்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு தற்போது டிரெண்டாகி வருகிறது.

கர்மா சும்மா விடாது

கர்மா சும்மா விடாது

தனது காதலி மலைகா அரோரா கர்ப்பமாக உள்ளார் என்கிற வதந்தியை பரப்பியவர்களை கர்மா சும்மா விடாது என இன்ஸ்டாகிராமில் கடும் கோபத்துடன் அர்ஜுன் கபூர் வெளியிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. மலைகா அரோரா கர்ப்பமாக இல்லை என்பதை தான் இப்படி அர்ஜுன் கபூர் சொல்லி உள்ளார் என்பது தெளிவாகி உள்ளது.

ஓடிடியில் மலைகா

ஓடிடியில் மலைகா

பாலிவுட்டின் கவர்ச்சி குயின் மலைகா அரோரா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தனது புதிய வெப்சீரிஸை ஆரம்பித்துள்ளர். Moving in with Malaika எனும் அந்த ஓடிடி தொடர் ஆரம்பமாகி உள்ள நிலையில், அதில், மலைகாவின் வாழ்க்கை பற்றிய விஷயங்கள் வெளியாகி வருகின்றன. ஹாலிவுட்டில் கிம் கர்தாஷியன் தனது நிஜ வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கீப்பிங் அப் வித் கர்தாஷியன் என வெளியிட்டதை போல மலைகா அரோரா வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

நெட்டிசன்கள் சிலர் கிளப்பி விட்ட வதந்தியால் கடுப்பான பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூரை அவரது ரசிகர்கள் கூல் செய்து வருகின்றனர். மலைகா அரோராவை அர்ஜுன் கபூர் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்தே இருவரும் பிரேக்கப் செய்து விட்டனர் என்றும், மலைகா இன்னொருவரை காதலிக்கிறார் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X