ஸ்ரீதேவியின் மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை, மகன்
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவியின் மரணத்தால் போனி கபூரும் அவரின் மகன் அர்ஜுன் கபூரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவி தன் வாழ்வில் வந்ததால் தயாரிப்பாளர் போனி கபூர் தனது முதல் மனைவி மோனா, மகன் அர்ஜுன், மகள் அன்சுலாவை பிரிந்தார். முதல் மனைவி, பிள்ளைகளை பிரிந்து ஸ்ரீதேவியுடன் வசித்தார்.
சிறுவயதிலேயே தங்களை தனியாக விட்டுச் சென்றதால் அர்ஜுன் கபூருக்கு தனது தந்தை மீது கோபம் இருந்தது.

ஸ்ரீதேவி
தன் தாயின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார் என்று அர்ஜுன் கபூருக்கு ஸ்ரீதேவி மீதும் கோபம் இருந்தது. இதனால் அவர் ஸ்ரீதேவியுடன் பேசியதே இல்லை. மேலும் அவர் பற்றி செய்தியாளர்கள் கேட்டால் ஸ்ரீதேவி என் தந்தையின் மனைவி அவ்வளவு தான் என்று கூறி வந்தார்.

சொல்பேச்சு
போனி கபூர் மீது கோபமாக இருந்த அர்ஜுன் அவர் என்ன சொன்னாலும் கேட்பது இல்லை. தாங்கள் வளர்ந்தபோது தந்தை உடன் இல்லையே என்ற வருத்தம் அவருக்கு. தனது தாய் நோய்வாய்பட்டு இறந்தபோது கூட போனி தங்களுடன் இல்லை என்ற கோபம் அர்ஜுனுக்கு.

மகன்
முக்கிய தருணங்களில் போனி கபூர் தங்களை தவிக்கவிட்டதால் அர்ஜுன் மனதில் ஆறாத காயம் இருந்தது. இதனால் அவர் தந்தையுடன் முகம் கொடுத்து பேசாமல் இருந்தார்.

மரணம்
ஸ்ரீதேவி இறந்து அவரின் உடலை மும்பை கொண்டு வர போனி கபூர் அல்லாடியபோது அவருக்கு ஆறுதலாக இருக்க அர்ஜுன் கபூர் துபாய் சென்றார்.

வாகனம்
ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அர்ஜுன் கபூரும் இருந்தார். ஸ்ரீதேவியின் மரணத்தால் தந்தையும், மகனும் ஒன்று சேர்ந்துவிட்டனர் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.

ரத்து
அர்ஜுன் கபூர் விபுல் ஷாவின் நமஸ்தே கனடா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தந்தைக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனரிடம் சொல்லிவிட்டு மும்பை வந்துவிட்டார்.


Click it and Unblock the Notifications