இங்கப்பாருடா… நிஜ முதலையுடன் மோதுகிறாராம் கோமாளி ஹீரோ?

கோமாளி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள அர்ஜுன் கபூர் தனது புதிய படத்திற்காக நிஜ முதலையுடன் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: 2 ஸ்டேட்ஸ், இசாக்ஜாதே படங்களின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் கபூர்.

அசுதோஷ் கவுரிகர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பானிபட் படத்தில் நாயகனாக அர்ஜுன் கபூர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது புதிய படத்தில் முதலைகளுடன் சண்டையிடும் காட்சியில் அர்ஜுன் கபூர் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோமாளி ஹீரோ

கோமாளி ஹீரோ

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தில் நாயகனாக அர்ஜுன் கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தயாரித்து வரும் போனி கபூர், இந்தியில் கோமாளி படத்தை தயாரிக்கிறார்.

பானிபட்

பானிபட்

லகான், ஜோதா அக்பர், மொஹஞ்சதாரோ போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அசுதோஷ் கவுரிகர் இயக்கத்தில் உருவாகி வரும் பானிபட் படத்தில், அர்ஜுன் கபூர் நாயகனாக நடித்து வருகிறார். பானிபட் போர் குறித்த இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 6ம் தேதி பானிபட் படம் வெளியாகிறது.

சிஜி இல்லை

சிஜி இல்லை

பானிபட் படத்தை தொடர்ந்து, ரங்தே பசந்தி, உரி படங்களை இயக்கிய ரோனி ஸ்க்ரூவாலா இயக்கத்தில் அர்ஜுன் கபூர் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடாத அந்த படத்தில் வரும் ஆக்ரோஷமான ஒரு சண்டைக்காட்சி தாய்லாந்தில் படமாக்கப்பட உள்ளது. அந்த சண்டைக்காட்சியில் சிஜி இல்லாமல், நிஜ முதலைகளுடன் மோத உள்ளாராம் அர்ஜுன் கபூர்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

சிஜியில் எடுத்தால் அந்த காட்சிக்கான வலிமை இல்லாமல் போய்விடும் என்பதால், முறையான பயிற்சி எடுத்து அந்த சண்டைக்காக தீவிரமாக தயாராகும் முயற்சியில் அர்ஜுன் கபூர் இறங்கியுள்ளாதாகவும் அடுத்த வாரத்தில் அந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X