தன்னை விட 12 வயது சின்ன நடிகரை காதலிக்கிறாரா நடிகை?
Recommended Video

மும்பை: நடிகர் அர்ஜுன் கபூரும், நடிகை மலாய்கா அரோராவும் காதலிப்பதாக மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மூலம் பிறந்த மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட் படங்களில் நடித்து வரும் அவருக்கும், நடிகை மலாய்கா அரோராவுக்கும் இடையே காதல் என்று பல காலமாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அந்த பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது.

விவாகரத்து
மலாய்கா தனது கணவரான அர்பாஸ் கானை பிரிந்த பிறகு அர்ஜுன் கபூருடன் அதிக நேரம் செலவிடுவதாக செய்திகள் வெளியாகின. அர்ஜுன் மலாய்காவுடன் நெருக்கம் காட்டுவது அர்பாஸின் அண்ணனான சல்மான் கானுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் எங்காவது சல்மான் கானை பார்த்தால் அர்ஜுன் எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.
ஜோடி
டிவி நிகழ்ச்சி ஒன்றில் மலாய்காவும், அர்ஜுன் கபூரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் கை கோர்த்து நடந்து வந்தனர். மேலும் ஜோடியாக மேடையிலும் டான்ஸ் ஆடினார்கள். நிகழ்ச்சியின் போது அவர்கள் செல்ஃபியும் எடுத்தார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே காதல் என்கிற பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது.

போனி கபூர்
மலாய்கா அரோரா அர்ஜுன் கபூரை விட 12 வயது பெரியவர். மலாய்காவுக்கு 16 வயதில் அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். அர்ஜுன் மலாய்காவுடன் பழகுவது போனி கபூருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது குறித்து அவர் கண்டித்தும் அர்ஜுன் கேட்கவில்லை என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

அர்ஜுன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஃபேஷன் ஷோவில் அர்ஜுனும், மலாய்காவும் ஜோடியாக முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். அப்போதும் அவர்கள் பற்றிய பேச்சு கிளம்பியது. மலாய்காவை பிரிந்த அர்பாஸ் கான் ஜார்ஜியா என்ற பெண்ணை காதலிக்கிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











