உமாபதிதான் மருமகன்னு கனவில் கூட நினைக்கல.. மகள் காதல் குறித்து அர்ஜுன் வெளிப்படை பேச்சு

சென்னை: ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்‌ஷனாலும் பட்டையை கிளப்பியவர். அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தச் சூழலில் தனது மகளின் காதல் குறித்து அர்ஜுன் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக பேசினார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட படங்களை இயக்கிய அர்ஜுன், இப்போது குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்துவருகிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் ஹரோல்டு தாஸ் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். தியேட்டரில் விஜய் என்ட்ரிக்கு எப்படி அப்ளாஸுகள் எழுந்தனவோ அதேபோல் அர்ஜுனின் என்ட்ரிக்கும் எழுந்தன. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் முக்கியமான ரோலில் நடிக்கிறார்.

{image-newproject-2024-06-16t123410-552-1718521484.jpg tamil.filmibeat.com

மகள் ஐஸ்வர்யா: நடிகர் அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு கன்னடத்தில் பிரேம பரஹா, தமிழில் சொல்லிவிடவா ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

திருமணம்: சூழல் இப்படி இருக்க கோலிவுட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்தார் ஐஸ்வர்யா. இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். அர்ஜுன் மகளும், தம்பி ராமையாவின் மகனும் காதலிக்கும் விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையே தந்தது. ஏனெனில் இரண்டு பேரும் இணைந்து ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. இரண்டு பேரின் காதலுக்கும் க்ரீன் சிக்னல் விழுந்ததை அடுத்து ஜூன் 10அம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.

அர்ஜுன் பேச்சு: இந்நிலையில் திருமண வரவேற்பை முடித்து பத்திரிகையாளர்களை மணமக்கள், அர்ஜுன், தம்பி ராமையா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது பேசிய அர்ஜுன், "தம்பி ராமையாவின் குடும்பம் பண்பாடு உள்ள குடும்பம். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தென்னாப்பிரிக்கா சென்றபோது அந்த நிகழ்ச்சியில் உமாபதியும் போட்டியாளராக கலந்துகொண்டார். கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஒவ்வொரு நொடியும் அவரை பார்த்திருக்கிறேன்.

கனவில்கூட நினைக்கவில்லை: அமைதியானவர், திறமைசாரி, காமெடி சென்ஸ் உள்ளவர். அந்த சமயத்தில் உமாபதி எனக்கு மருமகனாக வருவார் என்று தெரியாது. பிறகு ஒருநாள் ஐஸ்வர்யா என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினார். சரி காதலாகத்தான் இருக்கும் என்று நினைத்து சென்றேன். நான் நினைத்தபடியே காதல் விஷயத்தைத்தான் சொன்னார். ஆனால் உமாபதியை காதலிப்பேன் என்று எனது மகள் சொல்வார் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. பதின்ம பருவத்தில் ஒரு முடிவு எடுத்தால் நமது குழந்தை சரியான முடிவு எடுத்திருக்கிறாரா என்ற அச்சம் இருக்கும். ஆனால் இந்த வயதில் அவர்கள் முடிவு எடுத்தால் சரியாக இருக்கும். இது அவர்களது வாழ்க்கை. எனவே சரி என்று சொல்லிவிட்டேன்” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X