விஷாலிடம் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்தது: அர்ஜுன்
நடிகர் அர்ஜுன் விஷாலை புகழ்ந்துள்ளார்
சென்னை: விஷாலிடம் எதாவது சாதிக்க வேண்டுமென்ற வெறி இருந்ததாக அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நல இயக்கம் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் விஷால் குறித்து நடிகர் அர்ஜுன் பேசியுள்ளார்.

விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் இரும்புத்திரை. இப்படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது.
அப்போது பேசிய நடிகர் அர்ஜுன், திரைப்படத்தில் முதலில் வில்லனாக நடிக்க நான் ஒத்துக்கொள்ளவில்லை. தேசப்பற்று உள்ள படங்களில் நடித்து இருக்கும் நிலையில் எதற்கு வில்லனாக நடிக்க வேண்டும் என தயங்கினேன்.
இயக்குனர் மித்ரன் கதை சொன்னபோது மிகவும் பிடித்திருந்தது. திருடனுக்கு தேள் கொட்டினால் பொத்திகிட்டு இருக்கணும். நீங்க எல்லாம் திருடனுங்க.. நான் தேளு.. என்ற ஒரு வசனத்தை சொன்ன உடனே நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன் என்றார்.
விஷால் பற்றி பேசும்போது, விஷாலை சிறுவயதிலிருந்தே நன்கு தெரியும். நான் வேதம் படம் இயக்கிக் கொண்டிருந்தபோது, விஷாலை தயாரிப்பாளர் ஜிகே.ரெட்டி கூட்டிவந்து, டெக்னிகலாக கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்கிறான். நீ உதவியாளராக சேர்த்துக்கொள் என்றார்.
அதன்பிறகு என்னுடைய படத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். பேக்ரவுண்ட் க்ளியர் பண்ண வேண்டுமென்றால் விஷாலிடம் தான் சொல்வேன். ஓடிப்போய் சுறுசுறுப்பாக வேலைகளை முடித்து விடுவார். நடிகர்களுக்கு காட்சிகளை விளக்க நடித்து காட்டச் சொன்னாலும் சிறப்பாக செய்வார். அப்போதே விஷாலிடம் பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற பொறி தெரிந்தது என அர்ஜுன் கூறினார்.


Click it and Unblock the Notifications











