twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதை வழக்கு.. சோதனையில் சிக்கிய மாத்திரைகள்.. நடிகரிடம் சரமாரி விசாரணை.. கைது செய்யப்படுகிறாரா?

    By
    |

    மும்பை: போதைப் பொருள் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

    பிரபல இந்தி நடிகர், சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்துகொண்டார்.

    மரத்தில் இருந்து தவறி விழுந்தார். பிரபல ஹீரோவின் மேக்கப் மேன் திடீர் பலி.. திரையுலகம் இரங்கல்! மரத்தில் இருந்து தவறி விழுந்தார். பிரபல ஹீரோவின் மேக்கப் மேன் திடீர் பலி.. திரையுலகம் இரங்கல்!

    இதை அடுத்து இந்தி சினிமா உலகில் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பாகி இருக்கிறது.

    பைகுலா சிறை

    பைகுலா சிறை

    இந்த வழக்கில், சுஷாந்த் சிங் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி, அவர் சகோதரர் சோவிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதம் பைகுலா சிறையில் இருந்த நடிகை ரியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து போதைப் பொருள் விவகாரத்தில் விசாரணை நடந்து வந்தது.

    கேப்ரில்லா தம்பி

    கேப்ரில்லா தம்பி

    இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸ் கைது செய்யப்பட்டர்

    நடிகை பாரதி சிங்

    நடிகை பாரதி சிங்

    இதற்கிடையே பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மாரிஜுவானா கைப்பற்றப்பட்டது. அடுத்து நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கணவருடன் கைது

    கணவருடன் கைது

    அவரும் கணவருடன் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான அந்தேரி, பாந்த்ரா, கர் பகுதிகளில் உள்ள வீடுகளில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அதில் சில மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

    மனநல மருத்துவர்

    மனநல மருத்துவர்

    இதையடுத்து, கடந்த மாதம் 13 ஆம் தேதி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டில் கைப்பற்றப்பட்ட மாத்திரைகள், மன நல மருத்துவர் பரிந்துரைத்தது என்றும் அது மனநலத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

    ஆஜராகி விளக்கம்

    ஆஜராகி விளக்கம்

    அதன்படி இன்று காலை அவர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு மனநல மருத்துவர் கொடுத்த மருந்து சீட்டுகளையும் (prescription) சமர்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த சீட்டுப் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டால், அர்ஜுன் ராம்பால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    English summary
    Arjun Rampal arrived at the NCB office for second round of questioning on Monday morning. The actor could get arrested if the doctor’s prescription that he submitted to the agency is found to be fake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X