கார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்
Recommended Video
மும்பை: காதலி கர்ப்பமாக உள்ளதை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல்.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் தனது மனைவி மெஹர் ஜெசியாவை கடந்த ஆண்டு மே மாதம் பிரிந்தார். திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்தது நெருக்கமானவர்களை அதிர வைத்தது.
அர்ஜுன், மெஹருக்கு மஹிகா, மஹிரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

அர்ஜுன்
மெஹரை பிரிந்த பிறகு அர்ஜுன் ராம்பலுக்கும், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நடிகையும், மாடலுமான கேப்ரியலா டிமிட்ரியாடஸுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள். இந்நிலையில் அர்ஜுன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குழந்தை
காதலி கேப்ரியலா கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் மூலம் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் அர்ஜுன் ராம்பல். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் கேப்ரியலா கர்ப்பமாகியுள்ளார்.

பாலிவுட்
காதலி கர்ப்பமாக இருப்பதை அர்ஜுன் ராம்பல் தைரியமாக அறிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கேப்ரியலா வெளிநாட்டுப் பெண் என்பதால் அவருக்கு இது பெரிய விஷயமாக இருக்காது ஆனால் அர்ஜுன் இப்படி ஆயிட்டாரே என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தெலுங்கு
கேப்ரியா 2014ம் ஆண்டு வெளியான சோனாலி கேபிள் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். பின்னர் 2016ம் ஆண்டு வெளியான ஊப்பிரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் தோழா படத்தில் ஜென்னியாக வந்தவர் தான் இந்த கேப்ரியலா.


Click it and Unblock the Notifications











