தொடரும் போதைப் பொருள் வழக்கு.. விசாரணைக்கு ஆஜராக பிரபல நடிகருக்கு மீண்டும் சம்மன்!
மும்பை: போதைப் பொருள் வழக்கில் ஆஜராக, பிரபல நடிகருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங், தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் பரபரப்பாகி இருக்கிறது.
இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி, அவர் சகோதரர் சோவிக் உட்பட சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

பைகுலா சிறை
ஒரு மாதமாக பைகுலா சிறையில் இருந்த நடிகை ரியா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.

அர்ஜுன் ராம்பால்
இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் பிரபல இந்தி நடிகரும் தயாரிப் பாளருமான அர்ஜுன் ராம்பாலின் காதலியான கேப்ரில்லா டிமெட்ரியாடிஸின் (Gabriella Demetriades) தம்பி அஜிசிலோஸ் டிமெட்ரியாடிஸை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நடிகை பாரதி சிங்
இதற்கிடையே பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் பிரோஸ் நதியத்வாலா மனைவி ஷபானா சயீத் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், மாரிஜுவானா கைப்பற்றப்பட்டது. அடுத்து நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கணவருடன் கைது
இதையடுத்து அவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான அந்தேரி, பாந்த்ரா, கர் பகுதிகளில் உள்ள வீடுகளில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் சம்மன்
பின்னர் கடந்த மாதம் 13 ஆம் தேதி போலீசார் அவரிடம் போதைப் பொருள் விவாகரம் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை (டிசம்பர் 16) விசாரணைக்கு ஆஜராகுமாறு அதில் கூறியுள்ளனர். இது பாலிவுட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











