திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்த பிரபல நடிகர்: காரணம்...

By Siva

Recommended Video

திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்த நடிகர்- வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பல் தனது மனைவி மெஹர் ஜெசியாவை பிரிந்துவிட்டார்.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும், அவரின் மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. இருவரும் தனித்தனியாக வசிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தாங்கள் பிரிவதாக இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர்.

பிரிவு

பிரிவு

அர்ஜுன் ராம்பல், மெஹர் ஜெசியாவுக்கு மஹிகா, மாயிரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துள்ளனர். பிரிந்துவிட்டாலும் குழந்தைகளுக்கு எதுவாக இருந்தாலும் சேர்ந்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

சூசன்

சூசன்

அர்ஜுன் ராம்பலுக்கும், நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால் தான் அவரின் திருமண வாழ்வில் பிரச்சனை துவங்கியது என்று முன்பு கூறப்பட்டது.

விவாகரத்து

விவாகரத்து

அர்ஜுன் ராம்பலுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தான் சூசன் தனது கணவர் ரித்திக் ரோஷனை விவாகரத்து செய்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் விவாகரத்தான பிறகும் சூசன் ரித்திக்குடன் தான் வெளியே சென்று வருகிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பார்ட்டி ஒன்றில் சூசனும், ராம்பலும் நெருக்கமாக பேசிக் கொண்டிருக்க மெஹர் அழுது கொண்டே வெளியே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

முடியவில்லை

முடியவில்லை

அர்ஜுன் ராம்பல், மெஹர் இடையேயான பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிதானது. இருப்பினும் பிரச்சனையை சரி செய்ய முயன்றனர். அப்படியும் ஒன்றும் நடக்காததால் பிரிந்துவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X