வர்மா படத்தை மறுபடியும் முதலில் இருந்து இயக்கப் போவது யார் தெரியுமா?

By Siva

Recommended Video

வர்மா படத்தை இயக்கப்போகும் அர்ஜுன் ரெட்டி உதவிஇயக்குனர்- வீடியோ

சென்னை: வர்மா படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படத்தை த்ருவ் விக்ரம், மேகா சவுத்ரி உள்ளிட்டோரை வைத்து இயக்கி முடித்தார் பாலா. ஆனால் படம் நன்றாக வரவில்லை என்று கூறி வேறு ஒரு இயக்குனரை வைத்து புதிதாக எடுக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

புதிதாக எடுக்கப்படும் படத்தில் த்ருவ் விக்ரம் இருக்கிறார். ஆனால் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றி இன்னும் தெரியவில்லை.

த்ருவ்

த்ருவ்

வர்மா படத்தை காதல் ஸ்பெஷலிஸ்டான கவுதம் மேனன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டியின் உதவியாளரான கிரிசய்யா இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதை

கதை

அர்ஜுன் ரெட்டி படத்தில் வேலை செய்துள்ளதால் கிரிசய்யா வர்மா படத்தை கதை மாறாமல் எடுப்பார் என்று தயாரிப்பு நிறுவனம் நம்புகிறதாம். பாலா எடுத்த வர்மா படம் அர்ஜுன் ரெட்டி போன்று இல்லை என்பது தான் தயாரிப்பு நிறுவனத்தின் குற்றச்சாட்டு ஆகும்.

பாலிவுட்

பாலிவுட்

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியையே வர்மா படத்தை இயக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பாலிவுட்டில் பிசியாக இருப்பதால் முடியவில்லையாம். இதையடுத்து தான் கிரிசய்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். வர்மா படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

வர்மா

வர்மா

த்ருவ் மற்றும் விக்ரம் ஆகியோர் வர்மா படத்தை பார்த்தார்கள். ஆனால் படத்தை தூக்கிப் போட்டுவிட்டு முதலில் இருந்து எடுக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X