"இந்தா வந்துட்ருக்கேன்..!" - தமிழுக்கு வரும் அர்ஜுன் ரெட்டி ஹீரோ... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை : தெலுங்கில் நடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவர் தற்போது தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தாக்கம் இப்போதும் பல ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் 'துருவ்' நடிக்க 'வர்மா' என்ற பெயரில் பாலா இயக்குகிறார். இப்படத்தின் ஹீரோயின் ஷாலினி பாண்டே '100 % காதல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் தேவரகொண்டா தமிழில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறாராம். இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
இதுபற்றிய அறிவிப்பை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதை ரீ-ட்வீட் செய்துள்ள விஜய் தேவரகொண்டா 'வந்துட்ருக்கேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது அறிவிப்பு தமிழ் ரசிகர்கள் பலர் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.
'அர்ஜுன் ரெட்டி' படம் வெளிவந்த பின்பு பெண் ரசிகைகளுக்கு விருப்பமான நடிகரான விஜய் தேவரகொண்டா இப்போது தமிழில் நடிக்கவிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. #KollywoodWelcomesVijayDeverakonda எனும் ஹேஸ்டேக்கில் அதிகமானோர் அவரை வரவேற்றிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











