தனது ஆசையைக் கூறி டைரக்டரை மிரளவைத்த 'அர்ஜு ன் ரெட்டி' ஹீரோயின்!
சென்னை : சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அர்ஜுன் ரெட்டி'.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷாலினி பாண்டே தற்போது லைம்லைட்டுக்குள் வந்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த இவர், 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்காக தெலுங்கு மொழியைக் கற்றுக்கொண்டு தானே சொந்தமாக டப்பிங் பேசி ஆச்சர்யப்படுத்தினார்.

தமிழில் நடிக்கிறார் :
'அர்ஜுன் ரெட்டி' வெற்றிபெற்றதையடுத்து தமிழில் சந்திரமௌலி என்பவர் இயக்கும் '1௦௦% காதல்' என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

திடீர் வாய்ப்பு :
'பிரம்மன்' நாயகி லாவண்யா திரிபாதி சில காரணங்களால் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாகத்தான் ஷாலினி இந்தப் படத்தில் நடிக்க வந்துள்ளார். துல்கர் சல்மான் நடிக்கும் 'மகாநதி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே.

டப்பிங்கும் நானே :
தெலுங்கை கற்றுக்கொண்டு தெலுங்கில் டப்பிங் பேசியது போல, தமிழையும் கற்றுக்கொண்டு நானேதான் தமிழில் டப்பிங் பேசுவேன் எனக் கூறி டைரக்டர் சந்திரமௌலியை மிரள வைத்துள்ளார் ஷாலினி பாண்டே.

தமிழ் டியூஷன் :
ஷாலினி பாண்டே தமிழ் கற்றுக்கொள்வதற்காக தற்போது அவருக்கு தமிழ் டியூஷன் வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











