நடிகையானர் மகள்... ஒரு சின்ன அட்வைஸ் மட்டும் கொடுத்த அர்ஜூன்!

By Sudha

சென்னை: நடிகர், நடிகையரின் வாரிசுகளும் நடிக்க வருவது புதுசல்ல.. அந்த வரிசையில் தற்போது அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் நடிக்க வந்துள்ளார். அப்பாவுக்கு வாழ்வு கொடுத்த தமிழ் சினிமாவில். 'விகடனுக்கு' அப்பாவுடன் சேர்ந்து ஐஸ்வர்யா கொடுத்த சின்ன பேட்டியிலிருந்து சில துளிகள்...

எல்லோருக்கும் நோ... விஷாலுக்கு எஸ்... !

எல்லோருக்கும் நோ... விஷாலுக்கு எஸ்... !

பூபதி பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் விஷால் தனக்கான ஜோடி செட் ஆகாமல் டென்ஷனாகித் திரிந்தபோதுதான் அவரது கண்ணில் பட்டாராம் ஐஸ்வர்யா.

லண்டனில் பேஷன் படிப்பு

லண்டனில் பேஷன் படிப்பு

ஐஸ்வர்யா லண்டனில் பேஷன் மேனேஜ்மென்ட் படித்து முடித்தவர். அவரைப் பார்த்த விஷால், எனக்கு நாயகி செட் ஆகவில்லை. என்னுடன் நடிக்கிறாயா என்று கேட்டபோது, இந்தப் படத்திற்கு மட்டும்தான் என்று கூறி சரி என்றாராம்.

ஸ்டெல்லா மேரீஸ்ல படிக்கிறபோதே நிறைய சான்ஸ்

ஸ்டெல்லா மேரீஸ்ல படிக்கிறபோதே நிறைய சான்ஸ்

ஐஸ்வர்யா கூறுகையில், ஸ்டெல்லா மேரீஸ்ல டிகிரி படிக்கும்போதே நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. எனக்கு சினிமாவே வேணாம்னு, பேஷன் மேனேஜ்மென்ட் படிக்க லண்டன் போயிட்டேன்.

ஆந்திராவிலும் கூப்பிட்டாங்க

ஆந்திராவிலும் கூப்பிட்டாங்க

ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஹைதராபாத்ல நடந்த ஃபேஷன் ஷோவுல நானும் அப்பாவும் ரேம்ப் வாக் போனோம். அர்ஜுனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணா?னு அப்ப எல்லோரும் ஆச்சர்யப்பட்டாங்க. அப்பவே தெலுங்குப் படங்களில் நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்பவும் முடியாதுன்னு சொல்லிட்டேன்.

விஷால் கூப்பிட்டப்போ

விஷால் கூப்பிட்டப்போ

விஷாலைச் சந்திச்சப்போ, எனக்கு ஹீரோயின் சரியா செட் ஆகலை. என் படத்துல ஹீரோயின் ரோலுக்கு முக்கியத்துவம் உண்டு. நீ நடிக்கிறியான்னு கேட்டார். சரி, ஒரு படம்தானே... நடிச்சுப் பார்ப்போம்னு தோணுச்சு... ஓ.கே. சொல்லிட்டேன் என்று கூறிச் சிரித்தார்.

ஆசிர்வதித்த தந்தை

ஆசிர்வதித்த தந்தை

அப்பா அர்ஜூன் கூறுகையில், டாக்டர் ஆகணும், என்ஜினீயர் ஆகணும்னு ஐஸ்வர்யாவுக்கு நாங்க எந்த நிர்ப்பந்தமும் கொடுக்கலை. லண்டனுக்குப் படிக்கப் போறேன்னு சொன்னப்ப, ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன். இப்போ நடிக்கப்போறேன்னு சொல்றாங்க. வாழ்த்துக்கள் சொல்லிட்டேன்.

சின்னதா ஒரு அட்வைஸ் மட்டும்

சின்னதா ஒரு அட்வைஸ் மட்டும்

சினிமா... பணம், பேர், புகழ் எல்லாமே அள்ளி அள்ளிக் கொடுக்கும். அதுக்குப் பதிலா, நாம நிறைய உழைக்கணும்... சின்சியரா இருக்கணும்னு ஒரு சீனியரா சின்ன அட்வைஸ் மட்டும் சொல்லியிருக்கேன். அவ்வளவுதான்!என்றார் அர்ஜூன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X