'ஜெய்ஹிந்த்-2': கவுண்டமணியைக் கழட்டிவிட்ட அர்ஜூன்
சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் தயாரித்து நடிக்கும் அடுத்த படம் 'ஜெய் ஹிந்த் 2'. இப்படம் கன்னடத்தில் 'அபிமன்யு' என்ற பெயரில் திரைக்கு வர இருக்கிறது.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்து வசூலைக் குவித்த படம் 'ஜெய்ஹிந்த்'. இதில் அர்ஜூன் ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார். காமெடியில் கவுண்டமணியும், செந்திலும் கலக்கி இருந்தனர். தற்போது மீண்டும் அதே படத்தலைப்பில் படம் இயக்குகிறார் அர்ஜூன்.
ஆனால், பழசு வேற கதை, புதுசு வேற கதை என கதை விடுகிறார் அர்ஜூன்....

செந்தில் கன்பார்ம்...
ஜெய்ஹிந்த் -2வில் செந்தில் நடிப்பது கன்பார்ம் ஆகிவிட்ட நிலையில், கவுண்டமணிக்குப் பதில் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் நடிக்கப் போகிறாராம். ஏன் இந்த மாற்றம் எனக் கேட்டதற்கு அர்ஜூன் தரப்பில் 'சும்மா...' என்ற பதில் தான் வந்திருக்கிறது.

எப்போ ஸ்டண்ட் மாஸ்டர்...
ஏறக்குறைய 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அர்ஜுன் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். ஆக்ஷன் கிங் எனப் புகழப்படும், அர்ஜுன் ஒரு படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக பண்யாற்றலாமே? எனக் கேட்டால், அதற்கு, அர்ஜூன், "இப்படத்தில் பவர்ஃபாஸ்ட்தான் ஸ்டண்ட் மாஸ்டர். என் ஒத்துழைப்பும் இருக்கும்," என அடக்கத்தோடு கூறுகிறார்.

இது வேற ‘அபிமன்யு’...
ஜெய்ஹிந்த்-2வை கன்னடத்தில் அபிமன்யு என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் அர்ஜூன். ஏற்கனவே, அபிமன்யு என்ற பெயரில் வந்த கன்னடப்படத்திற்கும், இப்படத்திற்கும் சம்பந்தமில்லையாம்.

அதே கதை இல்லையாம்..
அதேபோல், பழைய ஜெய்ஹிந்த்க்கும், ஜெய்ஹிந்த்-2க்கும் படத்தலைப்பைத் தவிர வேறு ஒற்றுமை ஒன்றும் இல்லை எனத் தெளிவு படுத்தியுள்ளார் அர்ஜூன்.


Click it and Unblock the Notifications











