விரைவில் திரைக்கு வரும் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் – 2
அர்ஜுனின் வெற்றிப் படமான ஜெய்ஹிந்த்தின் இரண்டாம் பாகமான ஜெய்ஹிந்த் - 2 விரைவில் திரைக்கு வருகிறது.
தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் இது. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார்.
சிம்ரன்கபூர் என்ற முன்பை நடிகை இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

அர்ஜுன் இயக்கம்
அர்ஜுன் ஜெனியா இசையமைக்கிறார். கதை திரைக்கதை தயாரிப்பு இயக்கம் அர்ஜுன். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அர்ஜுன் இயக்கும் படம் இது.

கல்வி
படம் பற்றி அர்ஜுன் கூறுகையில், "இன்றைய கல்வி முறையை நாட்டுப்பற்று மற்றும் ஆக்ஷன் கலந்து அதிரடி படமாக உருவாக்கி இருக்கிறோம். கல்வி இப்படி இருந்தால் ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்ற பொதுவான ஒருவனின் கருத்தை இதில் சொல்கிறோம்.
ஒவ்வொரு பெற்றோரின் ஆசை, தங்களது வாரிசுகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதே. அந்த கனவு எங்கே? எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை இதில் பிரதிபலிக்கிறோம்," என்றார்.

பெங்களூரில்
சமீபத்தில் இந்த படத்திற்காக சென்னை மற்றும் பெங்களூரில் ஒரு பாடல் காட்சி படமாகப்பட்டது.
"அய்யா படிச்சவரே
அஞ்செழுத்து அர்ஜுனரே
கல்விக்கண் தொறக்கவந்த
காமராசு வகையறாவே"
என்று தொடங்கும் இந்தப் பாடலில்அர்ஜுன், கானா பாலா மற்றும் முன்னூறுக்கு மேற்ப்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்க, சரஸ்வதி பூஜை போன்ற அரங்கு அமைக்கப்பட்டு படமாக்கப் பட்டது .

சிங்கப்பூரில்...
"இவன் யாரிவன் நெருப்பானவன் " என்ற பாடல், அர்ஜுன், சிம்ரன் கபூர் நடிக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications











