'காட்டுப்புலி'யில் கவர்ச்சிப் புலிகள்!

By Shankar

கவர்ச்சி என்பதற்கு புதிய அர்த்தமே சொல்லியிருக்கிறார்கள் காட்டுப் புலி படத்தில். படத்தின் இரு நாயகிகளுக்கும் தம்மாத்துண்டு துணியைச் சுற்றிவிட்டு, அருவியிலும் ஆற்றிலும் புரட்டி எடுத்திருக்கிறார்கள்.

பாலிவுட்டில் புகழ்பெற்ற சண்டைக்காட்சி இயக்குனர் டினு வர்மா (7 ஆஸ்கர் விருதுகள் பெற்றவர்) இயக்கும் இந்தப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகிறது. மும்பை மற்றும் அதனைச்சுற்றிய காட்டுப்பகுதிகளில் நடக்கும் ஒரு த்ரில்லர் கதையை, திகட்டத் திகட்ட கவர்ச்சியோடு சொல்லியிருக்கிறார் டினு வர்மா.

கூடவே மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்ற மெஸேஜும் உண்டாம்.

நரமாமிசம் உண்பவர்கள் மனிதர்களை வேட்டையாடும் காட்சிகளும் உண்டாம்.

அர்ஜுன்தான் ஹீரோ. அர்ஜுனுக்கு ஜோடியாக பியங்கா தேசாயும் அவர்களது மகளாக தான்யாவும் நடித்திருக்கிறார்கள்.

இதில் மூன்று ஜோடிகளாக ராஜ் நீஸ் - சாயாலி பகத், அமீத்- ஹனயா, ஜாஹன் - ஜெனிபர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

ஜாஹன் - ஜெனிபர் ஜோடிகள் இந்தப் படத்தில் உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சிக்கு 17 டேக் எடுத்தார்களாம்!

கபிஷேக் பிலிம்ஸ் சார்பாக டினு வர்மாவே படத்தை தயாரித்துள்ளார். இசை விஜய் வர்மா. காட்டு புலி வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X