Bad Girl:வெற்றிமாறன்,பா.ரஞ்சித்தை போக்ஸோவில் கைது செய்யணும்.. ஒருமையில் விமர்சித்த அர்ஜூன் சம்பத்!

சென்னை: அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், சிறுமிகளை சீரழிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் பேட் கேர்ட் திரைப்படத்தை ததை செய்ய வேண்டும் என்றார். மேலும், இந்த படத்தை தயாரித்த வெற்றிமாறன்,பா.ரஞ்சித்தை போக்ஸோவில் கைது செய்ய வேண்டும் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரித்து இருக்கும் இப்படத்தில், அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

bad girl vetrimaaran arjun sampath

மோசமான படம்: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பந்த், பேட் கேர்ள் திரைப்படத்தில் பள்ளிக்கு வரும் சிறுமி, காமத்தில் ஈடுபடுவது, காதலில் ஈடுபடுவது, தட்டி கேட்கும் பெற்றோரை அந்த சிறுமி எதிர்த்து பேசி, தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் சிறுமிகள் கர்ப்பம் அடைவது அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த இடத்தை பார்த்தாலும், பாலியல் சீண்டல், பாலியல் தொந்தரவு அதிகமாகவே இருக்கிறது. அண்மையில் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில், யார் அந்த சார்.. யார் அந்த கார்.. என்று அனைவரும் கேட்கும் நிலைமை இருந்தது. நிலைமை இப்படி மோசமாகிக் கொண்டு இருக்கும் நேரத்தில், பேட் கேர்ள் டீசல் டீசர் வெளியாகியிருக்கிறது.

போஸ்கோவில் கைது செய்ய வேண்டும்: இந்தப் படத்தை வெற்றிமாறன், பா ரஞ்சித் இன்னும் சிலர் பாராட்டுகிறார்கள். பெண்களுக்கு கட்டுப்பாடு இல்லாத பாலியல் சுதந்திரம் வேண்டும் என்று பேசுகிறார்கள். குழந்தைகளை நாம் பள்ளிக்கூடத்திற்கு படிப்பதற்காக அனுப்புகிறோமா? இல்லை இந்த வேலை செய்வதற்காக அனுப்புகிறோமா? இவர்களையெல்லாம் போஸ்கோ வழக்கில் கைது செய்ய வேண்டும். பெண் சிறுமிகளை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்க கூடிய வகையில், அவமானப்படுத்தும் வகையில் இப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கிறார்கள். உங்கள் வீட்டு குழந்தைகள் பேட் கேர்ளாக இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

வெட்கமா இல்லையா?: இதுபோன்று பேசுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? கேட்டால் பெரியார் பெண்களின் கட்டற்ற பாலியலை ஆதரித்தார் என்றெல்லாம் பேசுவார்கள். பெண், ஆண் போல உடை அணிந்து கொள்ள வேண்டும், வீட்டில் சமையல் அறை இருக்கக்கூடாது என்றெல்லாம் பேசுவார்கள். இதுதான் பெண் சுதந்திரமா? குறிப்பாக பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையிலும், பிராமண பெண் குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள். பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசரை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இந்த பேட் கேர்ள் திரைப்படம் இந்த சமூகத்திற்கு ஒரு தவறான முன் உதாரணம். இந்த படத்தின் டீசரை தடை செய்ய வேண்டும், படத்தையும் தடை செய்ய வேண்டும். அதற்காக தணிக்கைகுழுவையும், நீதிமன்றத்தையும் நாடி வந்து இருக்கிறோம். என்று அர்ஜுன் நம்பர் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X