புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை: ஒரு விரல் புரட்சியை கலாய்த்த அர்ஜுன் சம்பத்
சென்னை: சர்கார் திரைப்படத்தின் ஒரு விரல் புரட்சி பாடலை அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் ஒரு விரல் புரட்சி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலுள்ள பல வரிகள் உணர்வுப்பூர்வமாக இருக்கின்றன.

மெர்சல் திரைப்படம் ரிலீஸானபோது ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான சில விஷயங்கள் படத்தில் இருந்ததால் பிரச்சனை பூதாகரமாகி, விசிடியில் விஜய் படம் பார்ப்பவர்கள் கூட வீதிக்கு வந்து தியேட்டரில் படம் பார்த்தனர்.
இப்போது சர்கார் படம் வரவுள்ளது. பொதுவாக முருகதாஸ் படமென்றாலே சமூகப் பிரச்சனை கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். சர்கார் என பெயரிட்டுள்ளதால் ஏதோ வெயிட்டாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு விரல் புரட்சி பாடலை விமர்சித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ட்வீட்டியுள்ளார்.
"புரட்சியுமில்லை புண்ணாக்குமில்லை..
இப்போதைக்கு புரட்சி போராட்டங்களை பற்றி படமெடுத்தால் நன்றாக ஓடுமென்று சினிமா சீசனல் புரட்சியாளர்களுக்குத் தெரியும்.
சினிமா பாடல்களில் புரட்சியான வரிகளை புகுத்துவதென்பது விவாத, எதிர்ப்புகள் மூலம் பிரபலநோக்கு காண வியாபார யுக்தி அவ்வளவே!" என்று ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











