ஹனுமானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டிய அர்ஜுன்... விரைவில் கும்பாபிஷேகம்
சென்னை : ஆக்ஷன் கிங் என புகழப்படும் அர்ஜுன் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு ரசிகர்களிடமும் மிக பிரபலம். அவர் நடித்த ஜென்டில்மேன், ஒக்கே ஒக்கடு ஆகிய படங்கள் செம ஹிட்.

அர்ஜுன் கடந்த 4 ஆண்டுகளாக ஹனுமானுக்கு பிரம்மாண்ட கோயில் ஒன்றை சென்னை விமான நிலையம் அருகே நிலம் வாங்கி கட்டி வந்தார். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் ஜுலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடத்தப்பட உள்ளது.
இந்த விழா இரண்டு நாட்களும் அர்ஜுன் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டே கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த கோயில் கொரோனாவால் தாமதமானது.
இது பற்றி அர்ஜுன் கூறுகையில், கோயில் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவே திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காலம் என்பதால் மிக குறைந்த நபர்களைக் கொண்டு, எளிமையாக நடத்தப்பட உள்ளது. இதனை காண விரும்புபவர்களுக்காக நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளோம் என்றார்.
அமர்ந்த நிலையில் ஹனுமானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 140 டன்கள். அர்ஜுன் தீவிரமான ஹனுமான் பக்தராம். கிருஷ்ண வம்சி இயக்கிய ஸ்ரீ ஆஞ்சநேயம் என்ற படத்தில் அர்ஜுன், ஹனுமான் வேடத்தில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











