ஆத்தாடி.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுனோட 2வது மகளா இது? ஒரே பிகினி போட்டோக்களா போட்டுத் தாக்குறாரே!

சென்னை: நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் இளம் தொழிலதிபராக அசத்தி வருவது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், இன்ஸ்டாகிராமில் அர்ஜுனின் 2வது மகள் ஏகப்பட்ட பிகினி போட்டோக்களை போட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

ஆக்‌ஷன் கிங் என ரசிகர்கள் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் அர்ஜுனின் அழகான 2வது மகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த ஸ்ரீநிவாச சர்ஜா சினிமாவில் நுழையும் போது அர்ஜுனாக மாறினார். ஆரம்பத்தில் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த அர்ஜுன் அதன் பின்னர் 1984ம் ஆண்டு நன்றி எனும் தமிழ் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ஸ்டன்ட் காட்சிகளில் பட்டையை கிளப்பிய நிலையில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்கிற பட்டம் அவருக்கு கிடைத்தது.

தளபதி 67

தளபதி 67

ஷங்கரின் ஜென்டில்மேன் மற்றும் முதல்வன் திரைப்படங்கள் நடிகர் அர்ஜுனுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தன. ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் அதன் பின்னர் வில்லனாகவும் மாஸ் காட்டினார். அஜித்தின் மங்காத்தா படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த அர்ஜுன் தற்போது விஜய் உடன் தளபதி 67 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார்.

ஐஸ்வர்யா அர்ஜுன்

ஐஸ்வர்யா அர்ஜுன்

நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷாலின் பட்டத்து யானை படம் மூலம் தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு, 2018ல் சொல்லி விடவா எனும் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் தற்போது நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

2வது மகள்

2வது மகள்

அக்காவை போல தங்கை அஞ்சனா அர்ஜுன் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகவில்லை. ஹேண்ட்பேக் செய்யும் நிறுவனத்தை ஆரம்பித்து தொழிலதிபராக அசத்தி வருகிறார். உலகிலேயே முதல் முறையாக பழத்தின் தோலில் இருந்து ஹேண்ட்பேக் செய்யும் வித்தையை செய்து கலக்கி வருகிறார் அஞ்சனா அர்ஜுன்.

பிகினி பேபி

பிகினி பேபி

ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ஹாட் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதிலும் பிகினி உடையில் எடுத்த கவர்ச்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரப்பி உள்ளார் அஞ்சனா அர்ஜுன். அவரது போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

லைக்ஸ் அள்ளுது

லைக்ஸ் அள்ளுது

நீச்சல் குளத்தில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள அர்ஜுன் மகளின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். மேக்னா ராஜ், உள்ளிட்ட நடிகைகளும் இவரது போட்டோக்களுக்கு லைக்குகளையும் கமெண்டுகளையும் போட்டு வருகின்றனர். நீங்க சினிமாவில் நடிக்க வரலையா என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் போட்டு அஞ்சனாவை தொல்லை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X