Arjun daughter: அர்ஜுன் குடும்பத்தில் விசேஷம்.. அம்மா, அப்பா, அக்காவுடன் ரெண்டாவது மகள் செம ஹேப்பி!

சென்னை: ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகையாக தமிழ் மற்றும் கன்னட படங்களில் கலக்கி வருகிறார். அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா சினிமாவே வேண்டாம் சாமி என சைலன்ட்டாக ஒதுங்கி தொழிலதிபர் ஆகிவிட்டார்.

பழத்தோலை வைத்து வித விதமாக ஹேண்ட்பேக் செய்ய முடியும் என்பதை கண்டுகொண்ட அஞ்சனா அந்த பிசினஸை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது பிறந்தநாளை அம்மா, அப்பா மற்றும் அக்காவுடன் அஞ்சனா கொண்டாடிய நிலையில், அதன் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Arjun Second daughter Anjana Arjun celebrates her birthday with family

நடிகர் அர்ஜுனுக்கு ரெண்டு பொண்ணு: நடிகை நிவேதிதாவை திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் சினிமா நடிகையாக தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷாலின் பட்டத்து யானை படம் மூலம் 2013ம் ஆண்டு அறிமுகமானார். அதன் பிறகு, 2018ல் சொல்லி விடவா எனும் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் தற்போது நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் கிங்கின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன் சினிமா ஹீரோயினாக ஆகாமல் நன்கு படித்து தனக்கான தொழிலை தேடிக் கண்டுபிடித்து பழங்களை வைத்து ஹேண்ட்பேக் செய்யும் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார்.

Arjun Second daughter Anjana Arjun celebrates her birthday with family

அஞ்சனா அர்ஜுன் பிறந்தநாள்: 1995ம் ஆண்டு நடிகர் அர்ஜுனுக்கு மகளாக பிறந்த அஞ்சனா அர்ஜுன் நேற்று தனது 28வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் அனைவரும் அந்த போட்டோவில் அர்ஜுன், அவரது மனைவி, அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் அவர்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பார்த்து வியந்து போயுள்ளனர்.

பர்த்தே பார்ட்டி: குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய அஞ்சனா அர்ஜுன் தனது பர்த்டே பிக்ஸை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை வாங்கி வருகிறார்.

ஹேப்பி பர்த்டே அஞ்சனா என்றும் செம க்யூட்டாக இருக்கீங்க, கார்ஜியஸ் குயின் என ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

Arjun Second daughter Anjana Arjun celebrates her birthday with family

குடும்பத்துடன் அர்ஜுன்: நடிகர் அர்ஜுன் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் செம ஹேப்பியாக அஞ்சனா அர்ஜுன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட நிலையில், கண் பட்டுடப் போகுது திருஷ்டி சுத்திப் போடுங்க என்றும் கூட இருக்க அந்த பசங்க யாரு என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தளபதி விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X