ஜெய்ஹிந்த் 2… அர்ஜூன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்
ஆக்சன் கிங் அர்ஜூன் ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாத்தை பாகத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட கையோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேசனம் மூலம் 10க்கும் மேற்பட்ட ஹிட் படங்களை அளித்துள்ளார் அர்ஜூன். ஜெய்ஹிந்த் 2 படத்தினையும் சொந்த தயாரிப்பில் இயக்குகிறார் அர்ஜூன்.
மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த அர்ஜூன் அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பினைப் பார்த்து மீண்டும் ஆக்சன் நாயகனாக களமிறங்குகிறார். இந்த படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடிக்கிறார் சுர்வீன் சாவ்லா. இவர் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஜோடியாக நடித்தவர்.

ஜெய்ஹிந்த்
ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்து இயக்கிய சூப்பர் ஹிட் படம் ஜெய்ஹிந்த். இதில் ரஞ்சிதா ஜோடியாக நடித்திருந்தார். கவுண்டமணி, செந்தில் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது.

ஜெய்ஹிந்த் 2
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய இயக்கத்தில் ஜெய்ஹிந்த் பாகம் 2 ஐ இயக்குகிறார். இதில் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடித்த சுர்வீன் சாவ்லா, சிம்ரன் கபூர், மயில்சாமி, மனோபாலா, ராகுல் தேவி, ரவி கலா, சாயிஃப், ராஜீவ் ரவீந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இயக்கம் தயாரிப்பு அர்ஜூன்
இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என நான்கு பொறுப்புகளை ஏற்றுள்ளார் அர்ஜூன். வைரமுத்து பாடல்கள் எழுத ஹரிகிருஷ்ணா இசை அமைக்கிறார். ராஜூ சுந்தரம் நடன இயக்குநராக பணிபுரிகிறார்.

லண்டனில் படப்பிடிப்பு
20 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, கேரளா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.

பத்தாவது படம்
ஜெய்ஹிந்த் 2 அர்ஜூன் இயக்கும் பத்தாவது படமாகும். இந்தப் படமும் ஜெய்ஹிந்த் போல வெற்றி பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications











