சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்.. பொண்ணு யாரு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், சானியா சந்தோக் ஆகியோரின் நிச்சயதார்த்தம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ எளிமையாக நடைபெற்றது. இவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இணையத்தில் இச்செய்தி வேகமாகப் பரவி வருகிறது.

ஆஜ் தக் வெளியிட்ட செய்தியின்படி, ஆகஸ்ட் 13 அன்று அர்ஜுன் டெண்டுல்கருக்கும், சானியா சந்தோக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. டெண்டுல்கர் குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன், தனது ஆல்-ரவுண்டர் திறமைக்காக அறியப்படுகிறார். 25 வயதான அர்ஜுன், உள்நாட்டு கிரிக்கெட்டில் கோவா அணிக்காக விளையாடுகிறார். அவரது தந்தை சச்சின் டெண்டுல்கர் வலது கை பேட்ஸ்மேனாக இருந்த நிலையில், அர்ஜுன் இடது கை பந்துவீச்சாளர் ஆவார்.

2018-ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் அர்ஜுன் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் அர்ஜுன் அதிகம் சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும், அவரது சகோதரி சாரா டெண்டுல்கரின் சமூக வலைத்தளப் பதிவுகளில் பெரும்பாலும் இடம்பெறுவார்.

அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி சானியா சந்தோக் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி கையின் பேத்தி ஆவார். சோஷியல் மீடியா பிரபலமாக உள்ள சானியா சந்தோக்கைத்தான் அர்ஜுன் டெண்டுல்கர் நிச்சயம் செய்துள்ளார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சானியா சந்தோக், ஹோட்டல், உணவு, ஐஸ்கிரீம் போன்ற பல்வேறு துறைகளில் பல வணிக முயற்சிகளைக் கொண்ட ஒரு முக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

WVS-இல் ABC திட்டத்தை முடித்து, கால்நடை தொழில்நுட்ப வல்லுநராக சானியா சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும், செல்லப் பிராணிகளுக்கான தோல் பராமரிப்பு பிராண்டான 'Mr. Paws' இன் நிறுவனர் இவர். சானியாவின் நிச்சயதார்த்த செய்தி வெளியானதை அடுத்து, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா டுடே தகவலின்படி, சானியாவின் குடும்பத்திற்கு இன்டர் கான்டினென்டல் ஹோட்டலும், ப்ரூக்ளின் க்ரீமரியும் சொந்தமாக உள்ளன. புதிதாக நிச்சயிக்கப்பட்ட இந்த ஜோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல தகவல்களுக்கு இணைந்திருங்கள்.

More from Filmibeat

Read more about: india cricket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X