Leo - விஜய் சார்.. அவள் உங்களை தொந்தரவு செய்திருக்கமாட்டாள்.. லியோ படத்தின் இயலுடைய ரியல் தந்தை மகிழ்ச்சி

சென்னை: Leo (லியோ) லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயல் குறித்து அவர் ரியல் தந்தை அர்ஜுனன் ட்வீட் செய்திருக்கிறார்.

Arjunan tweeted about Iyal who played Vijays daughter in Leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆனால் பொதுவான ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது. பழைய கதை, திரைக்கதையில் ஒன்றுமே இல்லை என படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன.

பாக்ஸ் ஆபிஸ்: விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. அதேசமயம் வசூலில் லியோ நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் நடிப்பு சூப்பர்: படத்தின் கதையும், திரைக்கதையும் விமர்சனத்தை சந்தித்தாலும் விஜய்யின் நடிப்பை பலரும் கொண்டாடிவருகின்றனர். நடுத்தர வயது தந்தையாக விஜய் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து விஜய்யை கழித்துவிட்டால் ஒன்றுமே கிடையாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுக்கேற்றபடிதான் விஜய்யின் நடிப்பும் இருந்தது.

மகளுடன் கெமிஸ்ட்ரி: குறிப்பாக படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருக்கும் இயலுடன் விஜய் அவ்வளவு க்யூட்டாக நடித்திருந்தார். கரு கரு கருப்பாயி பாடலுக்கு தனது மகளுக்கு முன்பு விஜய் ஆடிய நடனமும், அந்த சீனில் இயலின் நடிப்பும் தியேட்டரில் வெகுவாகவே ரசிக்கப்பட்டது. இந்த சூழலில் இயலின் ரியல் தந்தை நடிகர் அர்ஜுனன் விஜய் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு ட்ரெண்டாகியுள்ளது.

Arjunan tweeted about Iyal who played Vijays daughter in Leo

நன்றி விஜய் சார்: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விஜய் சார் நீங்கள் அவள் மீது காட்டிய அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி. லியோ படத்தின் மூலம் உங்களுடனான பல சிறப்பான தருணங்கள் இயலுக்கு உண்டு. அவள் உங்களை அதிகம் தொந்தரவு செய்திருக்கமாட்டாள் என நம்புகிறேன்""என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அர்ஜுனன் ஏற்கனவே காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் லியோ ரிலீஸுக்கு முன்னர் இயல் அளித்த ஒரு பேட்டியில், பெயர் சொல்லி அழைக்க விஜய் தனக்கு பெர்மிஷன் கொடுத்திருந்தார் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X