கைதி வில்லனின் புதிய முயற்சி.. வெளியானது ப்ரோமோ!

சென்னை : கைதி திரைப்படத்தில் மிரட்டல் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.

தற்போது பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி இருந்தார்.

இவர் தற்போதுள்ள நோய்த்தொற்றை மையப்படுத்தி நடித்துள்ள ஆல்பம் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

வில்லன் வேடத்தில்

வில்லன் வேடத்தில்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. குறிப்பாக இந்த திரைப் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

மாஸ்டர்

மாஸ்டர்

மிரட்டும் கனத்த குரல், மிடுக்கான நடிப்பு என கைதி திரைப்படத்தில் நடித்திருந்த இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் உருவாகி போக மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து கலக்கியிருப்பார்.

எக்கச்சக்கமான கிரேஸ்

எக்கச்சக்கமான கிரேஸ்

வில்லன் கதாபாத்திரங்கள் வந்தாலும் அதையும் ரசிகர்கள் ரசிக்கின்ற வகையில் மிகவும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் கொடுத்துவரும் அர்ஜுன் தாஸு க்கு பெண்கள் மத்தியில் எக்கச்சக்கமான கிரேஸ் இருக்க ஹீரோ வேடங்களும் இவருக்கு வந்து கொண்டுதான் உள்ளது.

2050-ல் சென்னை

2050-ல் சென்னை

இப்பொழுதுள்ள சூழலில் உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் பரவலை மையப்படுத்தி "போட்டும் போகட்டுமே" என்ற பாடல் உருவாகி வருகிறது. அதன் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அர்ஜுன் தாஸ், லாவண்யா த்ருப்பதி லீட் ரோலில் நடிக்க ஆரம்பமே 2050-ல் சென்னை என ஆரம்பிக்க அறை முழுவதும் புகை மண்டலம் சூழ சிகப்பு நிற வெளிச்சத்தில் அர்ஜுன் தாஸ் நிற்கின்றவாரு ஆரம்பிக்கிறது. மெட்ராஸ் லோகி விக்னேஷ் இயக்கத்தில், சத்யஜித் ரவி, ஜென் மார்ட்டின் ஆகியோரின் இசையில் உருவாகியிருக்கும் "போட்டும் போகட்டுமே" பாடல் வரும் 20ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X