மரகத நாணயம் 2வது பாகம் உருவாக இருக்காம்... டைரக்டர் அறிவிச்சுருக்காரு
சென்னை : கடந்த 2017ல் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற படம் மரகத நாணயம்.
அறிமுக இயக்குநர் ஏஆர்கே சரவண் இயக்கத்தில் வெளியான இந்த படம் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அப்டேட்டை இயக்குநர் சரவண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மரகத நாணயம் படம்
கடந்த 2017ல் வெளியாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற படம் மரகத நாணயம். ஆக்ஷஸ் பிலிம் பேக்டரியின் டில்லி பாபு தயாரித்திருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இயக்குநர் ஏஆர்கே சரவண் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருந்தார்.

அடுத்த படத்தில் கமிட் ஆகாத சரவண்
ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்தராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான இந்த படம் டைரக்டருக்கு சிறப்பான பேரை பெற்று தந்த போதிலும் தொடர்ந்து அடுத்த படத்தை அவர் இயக்கவில்லை. அனைத்தும் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளன.

சரவண் அப்டேட்
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சரவண் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தகவலை படத்தின் இயக்குநர் ஏஆர்கே சரவணும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறப்பான படம்
இரண்டாவது பாகத்திற்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லிபாபுவிடம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை துவக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் மீண்டும் ஒரு சிறப்பான படத்தை சரவணிடம் எதிர்பார்க்கலாம்.

தமிழகம் மீள பிரார்த்தனை
மேலும் கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











