மதராஸியின் துப்பாக்கி தெறிக்குது.. A.R. முருகதாஸின் அட்டகாசமான கம்பேக்.. SK காட்டில் தோட்டா மழை!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படமானது பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக படத்தை பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். தர்பார் மற்றும் சிகிந்தர் என இரண்டு படங்களில் அட்டர் ஃபிளாப் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தில் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இது மொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களின் பாராட்டு மழையில் மொத்த படக்குழுவும் இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு என 4 காரணங்களை ரசிகர்கள் பலரும் கூறுகிறார்கள். முதலாவது காரணம் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் கம்பேக் தான். படத்தின் கதை, திரைக்கதை என மொத்தமும் படத்திற்கு பிளஸ். முதல் பாதி குறித்து வெகு சில ரசிகர்கள் தான் கலவையான விமர்சனத்தைக் கொடுத்தாலும் மொத்த படமாக வேற லெவலில் உள்ளது என பாராட்டி வருகிறார்கள்.
படக்குழு: அடுத்தது ரசிகர்கள் கொண்டாடுவது, சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யூ ஜமால், பிஜு மேனன் ஆகியோரின் நடிப்புதான். மொத்த கலைஞர்களும் சிறப்பாக நடித்திருந்தாலும், இவர்கள் மூவரின் நடிப்பு படத்தை ஒரு படி மேல் உயர்த்துகிறது என்று பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக வித்யூ ஜமால் படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்வதுடன், தான் தான் தரமான வில்லன் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

அனிருத்: அடுத்த காரணம் என்றால் அது, என் எஸ்.கே.வுக்காக நான் எப்போதும் நிற்பேன்னு சொன்ன, அனிருத் தான். படத்தின் வேகத்திற்கு மிகவும் அட்டகாசமான பின்னணி இசையை கொடுத்து மிரட்டி விட்டுள்ளார் அனிருத். அவரது பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்காக அனிருத் இறங்கி வேலை பார்த்துள்ளார் என்பது மட்டும் உறுதியாக கூறலாம் என பாராட்டி வருகிறார்கள்.
ஒளிப்பதிவு: பரபரப்பான திரைக்கதைக்கும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்கும் மொத்த படக்குழுவும் போட்ட உழைப்புக்கு இணையான உழைப்பை வெளிப்படுத்தி உள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர் சுதீப் எலமோன். இவரது கேமிரா படத்தின் ஆக்ஷன் காட்சிகளை கண் முன் நடக்கும் சண்டைக் காட்சிகள் போலக் காட்டியுள்ளது. இவரது கேமரா ஒர்க் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அவரையும் ரசிகர்கள் பாராட்டித் தள்ளுகிறார்கள்.

பெரிய வெற்றி: மொத்ததில் மதராஸி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறுவதற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உள்ளது என ரசிகர்கள் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. எனவே அமரன் படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் தனது மார்க்கெட்டினை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார். ரூபாய் 300 கோடிகள் முதல் ரூபாய் 350 கோடிகள் வரை அவரது பிசினஸ் இந்த படத்திலும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் இப்போதே அடிபடுவதால், மதராஸி அவருக்கு பண மழை, பாராட்டு மழையைக் கை கூடச் செய்துள்ளது. மொத்தத்தில் மதராஸி தோட்டா மழையில் உருவாக்கப்பட்ட ஒரு வெற்றி மாலை என பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











