சட்டவிரோதமாக 41 பாட்டில் ஸ்காட்ச் வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம் கைது
மும்பை: சட்டவிரோதமாக 41 மது பாட்டில்கள் வைத்திருந்த பிக் பாஸ் பிரபலம் அர்மான் கோஹ்லியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிக் பாஸ் 7 இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகர் அர்மான் கோஹ்லி. அந்த நிகழ்ச்சியின்போது அவர் நடிகை கஜோலின் தங்கை தனிஷாவை காதலித்தார்.

இருவரும் சேர்ந்து பிக் பாஸ் வீட்டில் அடித்த லூட்டி ரொம்ப பிரபலம். கோபத்திற்கு பெயர் போனவர் அர்மான் கோஹ்லி. அவர் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் 41 பாட்டில் ஸ்காட்ச் விஸ்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.
ஒருவர் ஒரு மாதத்திற்கு மேல் 12 மது பாட்டில்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. வெளிநாட்டில் இருந்து ஒரு முறை ஒரு மது பாட்டில் மட்டமே கொண்டு வர சட்டம் அனுமதிக்கிறது. இந்நிலையில் கோஹ்லி வீட்டில் 41 பாட்டில்கள் இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பை போலீசார் கணக்கிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக கோஹ்லியிடம் விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக அவர் தனது முன்னாள் காதலி நீரு ரந்தவாவை தாக்கி போலீசில் சிக்கினார்.
அந்த பெண் கோஹ்லி மீது போலீசில் புகார் அளிக்கவே வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











