நடிகை மீதுள்ள கோபத்தால் அவரின் அக்கா பங்களா முன்பு சிறுநீர் கழிக்கும் நடிகர்
மும்பை: முன்னாள் காதலி தனிஷா மீது இருக்கும் கடுப்பில் நடிகை ராணி முகர்ஜியின் பங்களாவுக்கு வெளியே சிறுநீர் கழித்து வருகிறார் நடிகர் அர்மான் கோஹ்லி.
பாலிவுட் நடிகை கஜோலின் தங்கை தனிஷா இந்தி பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குடும்பத்தார் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கும், நடிகர் அர்மான் கோஹ்லிக்கும் இடையே காதல் ஏற்பட்டு கேமராக்கள் இருப்பதை மறந்து ஓவர் நெருக்கமாகினர். ஆனால் அந்த காதல் நிலைக்கவில்லை.

தனிஷா
அர்மான் கோஹ்லி எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர். பெண்களை அடித்து துன்புறுத்துவதற்கு பெயர் போனவர். இந்நிலையில் அவரால் காதலை முறித்துக் கொண்ட தனிஷா மீது கோபப்படாமல் இருக்க முடியவில்லை. தனிஷாவின் மீது இருக்கும் கோபத்தில் அவர் செய்து வரும் காரியம் பாலிவுட்காரர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

ராணி முகர்ஜி
தனிஷா மீதுள்ள கோபத்தில் அர்மான் கோஹ்லி பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் பங்களா முன்பு அடிக்கடி சிறுநீர் கழித்து வருகிறார். தனிஷாவின் கசின் ராணி முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகர் இந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்வது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

பிரிவு
பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தனிஷாவும், அர்மான் கோஹ்லியும் ஓராண்டு காதலித்தனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். பிரிந்து சில ஆண்டுகள் ஆகியும் அர்மான் கோஹ்லி இன்னும் தனிஷா மீது கடும் கோபத்தில் உள்ளார். அர்மான் ராணியின் பங்களாவுக்கு அடிக்கடி வந்து சிறுநீர் கழிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அவருக்கு கடிதம் எழுதியும் பலனில்லை.

நீரு
அர்மான் தனிஷாவை பிரிந்த பிறகு நீரு ரந்தவா என்ற மாடல் அழகியுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அர்மான் தன்னை அடித்து காயப்படுத்தியதாக நீரு கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். அவரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்மான் கோஹ்லியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











