டிக் டாக்கில் கலக்கும் சாமானியர்.. இன்னாம்மா ஆடுறார்.. ஹிரித்திக் ரோஷன் இதை பார்த்தே ஆகணும்!

சென்னை: டிக் டாக்கில் சாமானியர் ஒருவர் சர்வ சாதாரணமாக ஹிரித்திக் ரோஷன், ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களின் பாடல்களுக்கு சூப்பரா நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

டிக் டாக்கில் கலக்கும் சாமானியர்.. இன்னாம்மா ஆடுறார் - வீடியோ

சீன நிறுவனமான டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என ஒரு பக்கம் குரல்கள் எழுந்தாலும், மறுபக்கம் அது சாமானியர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் சமூக வலைதளமாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

அர்மான் ரத்தோட் எனும் இளைஞர் டிக் டாக்கில் தனது நடன வீடியோக்களை பதிவிட்டு இந்திய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார்.

சர்வ சாதாரணமாக

சர்வ சாதாரணமாக

100 கோடிக்கும் அதிகமானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் வட இந்தியாவை சேர்ந்த அர்மான் ரத்தோட் எனும் இளைஞர், உடுத்த நல்ல துணி கூட இல்லாத நிலையில், தனது நடன திறமையால் வைரலாகி உள்ளார். சர்வ சாதாரணமாக அவர் நடனமாடும் வீடியோக்களை பல லட்சம் ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

ஹிரித்திக் ரோஷன் போல

ஹிரித்திக் ரோஷன் போல

தூம் உள்ளிட்ட பல படங்களில் தனது நடன திறமையால் இந்திய ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை போல செம சூப்பரா, கை கால்களை நீட்டியும் வளைத்தும் இந்த அர்மான் ரத்தோட் நடனமாடுகிறார். மேலும், ஹிரித்திக் ரோஷன் பாடல்களுக்கு இவர் நடனமாடி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

டிவிட்டரிலும் டிரெண்டிங்

டிவிட்டரிலும் டிரெண்டிங்

டிக் டாக் செயலியில் டிரெண்டாகி வரும் இவரது வீடியோக்களை ரோஸி எனும் டிவிட்டர் ஐடி டிவிட்டரிலும் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். மேலும், இவரை போன்ற திறமையானவர்களை பிரபலமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு இவரது வீடியோக்களை டேக்கும் செய்துள்ளார்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

எப்படி இப்படி அசால்ட்டா அவ்வளவு பெரிய ஸ்டெப்ஸை எல்லாம் போட்டு டான்ஸ் ஆடுகிறார், நிச்சயம் அர்மானின் திறமை உலகம் அறிய வேண்டும், பிரபலங்கள் தயவு செய்து இந்த திறமையான கலைஞரை அடையாளம் கண்டு உதவுங்கள், சான்ஸே இல்லை, நடன இயக்குநர்கள் இல்லாமலே திறமையா அடுறார் என பல ரசிகர்களும் ஓவர் நைட்டில் இவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X