ரூ 2 கோடி வைர நகைகளுடன் விட்னி ஹூஸ்டன் அடக்கம்: சமாதிக்கு பலத்த பாதுகாப்பு!
நியூஜெர்ஸி: மரணமடைந்த பாப் பாடகி விட்னி ஹூஸ்டனின் உடல் அடக்கத்தின் போது அவரது உடலோடு விலை உயர்ந்த தங்க வைர நகைகளும் புதைக்கப்பட்டுள்ளன. இதனால் அவரது சமாதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி விட்னி ஹீஸ்டன் கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் நியூஜெர்சியில் உள்ள சொந்த ஊரான நீவார்க்கில் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் அடக்கத்தின் போது விட்னி விரும்பி அணியும் கருஞ்சிவப்பு நிற கவுன் உடை அணிவிக்கப்பட்டிருந்தது. அது தவிர அவர் விரும்பி அணியும் உடையில் குத்திக் கொள்ளும் வைர ஊசி, வைர கம்மல்கள் மற்றும் தங்கத்தினாலான ஒரு ஜோடி செருப்புகளும் அணிவிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அவரது சமாதியை உடைத்து உடலில் அணிவிக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த வைர நகைகள் கொள்ளையடிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. ஆகவே, அவரது சமாதிக்கு விட்னி குடும்பத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











