பினராயி, ரஜினி, இப்ப இவர்... கைகள் இல்லாத கலைஞன் பிரணவுடன் மோகன்லால் செல்ஃபி... வைரலாகும் போட்டோ!

By

கொச்சி: கைகள் இல்லாத ஆர்டிஸ்ட் பிரணவுடன் நடிகர் மோகன்லால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். கைகள் இல்லாத இவர், கால்களை கைகளாகக் கொண்டு சாதனைகள் படைத்து வருகிறார்.

இவர் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை கடந்த சில மாதங்களுக்கு முன் சந்தித்து, வெள்ள நிவாரணத்துக்கு நிதியளித்தார்.

முதலமைச்சர்

முதலமைச்சர்

தனது கால்கள் மூலம் முதலமைச்சருக்கு கைகுலுக்கி வணக்கம் வைத்தார். முதலமைச்சரும் அவரின் கால்களை பிடித்து குலுக்கினார். பின்னர் இருவரும் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. முதலமைச்சர் பினராயியையும் பிரணவையும் ஏராளமானோர் பாராட்டினார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகன் என்றும் அவரைப் பார்க்க ஆசையாக இருப்பதாகவும் பிரணவ் கூறியிருந்தார். இதையடுத்து தன்னை சந்திக்க வருமாறு ரஜினி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி போயஸ் கார்டன் சென்று கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ரஜினியை சந்தித்தார் பிரணவ்.

மோகன்லால்

பின்னர் அவருடன் கால்களால் செல்ஃபி எடுத்துக்கொண்ட அவர், தான் கால்களால் வரைந்த ஓவியத்தை பரிசளித்தார். இந்நிலையில் அவர் நடிகர் மோகன் லாலையும் சந்தித்துள்ளார். அவருடன் கொஞ்ச நேரம் செலவழித்த பிரணவ், ஓடியான் படத்தில் மோகன்லாலின் லுக்கை ஓவியமாக வரைந்து அவருக்கு பரிசாகக் கொடுத்தார். பின்னர் கால்களால் செல்பி எடுத்துக்கொண்டார்.

கனவு

கனவு

இந்தச் சந்திப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்திருந்தாலும் இப்போதுதான் இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், மோகன்லால். இதை ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். இதுபற்றி பிரணவ் கூறும்போது, மோகன்லாலை சந்திக்க வேண்டும் என்பது பல நாள் கனவு, பல முறை முயன்றும் முடியவில்லை. இப்போது அந்தக் கனவு நனவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X