காஷ்மீரில் #AdchiThooku கொண்டாட்டம்: வீடியோ இதோ
Recommended Video

சென்னை: அடிச்சிதூக்கு பாட்டுக்கு இதை விட பெரிய கவுரவம் இருக்க முடியாது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சிதூக்கு பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது.
அந்த வீடியோவை யூடியூபில் இதுவரை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

சாதனை
அடிச்சி தூக்கு பாடல் வீடியோ வெளியான 15 மணிநேரத்தில் 40 லட்சம் பேர் பார்த்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி எல்லாம் கொண்டாடத் தானே சத்யஜோதி பிலிம்ஸிடம் அப்டேட் கேட்டு கெஞ்சினார்கள்.
ராணுவம்
ராணுவத்தில் இருக்கும் தல ரசிகர் ஒருவர் அடிச்சி தூக்கு பாடலை கொண்டாடியபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அதை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
கிளம்பிட்டாங்க
அடிச்சிதூக்கு பாடலுக்கு டப்ஷ்மாஷ் செய்யத் துவங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள். கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா
அடிச்சிதூக்கு
நல்லா இருக்கு பாஸ்


Click it and Unblock the Notifications











