அர்னவை தூண்டி விட்டதே விஜய் சேதுபதி தானா?.. வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர் போஸ்ட்டை பார்த்தீங்களா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வீட்டில் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற அர்னவ் வெளியேறியுள்ளார். வீட்டில் இருந்து ஆத்திரத்தில் மாதிரி கோப்பையை போட்டு உடைத்த அர்னவ் வெளியே வந்து விஜய் சேதுபதியை சந்தித்த போது பிளாஸ்மா டிவி வழியாக உள்ளே இருக்கும் போட்டியாளர்களுடன் பேசினார்.
கேர்ள்ஸ் டீம் ராக்கிங் என்றும் பாய்ஸ் டீம் ஜால்ராஸ் என பேசிவிட்டு டேய் என்னடா பண்ண உள்ளே வந்திருக்கீங்க என ஒருமையில் பேச ஆரம்பித்தார். அதற்கு உடனடியாக விஜய் சேதுபதி உள்ளே புகுந்து மரியாதை இல்லாமல் பேசக் கூடாது என அர்னவை அசிங்கப்படுத்தி ஆஃப் செய்து விட்டார்.

வெளியே வந்த அர்னவ் தனது இன்ஸ்டாகிராம் முழுக்க அர்னவ் ராக்கிங் விஜய் சேதுபதி ஷாக்கிங் போன்ற வீடியோக்களையும் பாய்ஸ் டீமை ஜால்ராஸ் என்று சொல்லும் வீடியோக்களையும் ஷேர் செய்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீரியல் நடிகர்: இந்த சீசனில் தெரியாத முகங்களையெல்லாம் போட்டால் ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் செலுத்தி பார்க்க மாட்டார்கள் என்றும் போட்டியாளர்களுக்கு கேம் ஆடவே தெரியாமல் மிக்சர்களாக மாறிவிடுகின்றனர் என்பதால் சீரியல் நடிகர்களை ஒட்டுமொத்தமாக விஜய் டிவி இந்த முறை களமிறக்கியது. அவர்களை தாண்டி விஜேக்களையும் வரிசையாக இறக்கியது. செல்லம்மா சீரியல் கதாநாயகனான அர்னவ் பிக் பாஸ் போட்டியாளராக வருகிறார் என்றதுமே இருக்கு கன்டென்ட் இருக்கு என நினைத்தனர். கூடவே அன்ஷிதாவும் உள்ளே நுழைந்ததை பார்த்து ரசிகர்கள் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? என்றும் எதிர்பார்த்தனர்.
2வது வாரத்திலேயே எவிக்ட்: ஆனால், அன்ஷிதாவுடன் பேச மட்டுமே அர்னவ் பிக் பாஸ் வீட்டை பயன்படுத்திக் கொண்டார் என்றும் அர்னவுக்கு மட்டும் அன்ஷிதா அக்கறை காட்டுகிறார். ஊட்டி விடுகிறார். அர்னவ் ஆண்கள் அணியில் போட்டியாளராக எதுவுமே பண்ணவில்லை என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்திலேயே எவிக்ட் ஆகி வெளியேறினார்.
தூண்டி விட்ட விஜய் சேதுபதி: ஆரம்பத்தில் அர்னவ் அட்வைஸ் செய்யும் ரீதியில் மரியாதையாகத்தான் பேசினார். ஆனால், விஜய் சேதுபதி தான் அட்வைஸ் பண்ண போறீங்களா ரொம்ப போர் அடிக்குமே என மூஞ்சியில அடிச்சது மாதிரி பேசுங்க என உசுப்பி விட அர்னவ் நாமும் ரவீந்தர் போல பேச வேண்டும் போல என நினைத்து ஒரு படி மேலே சென்று டேய் ஜால்ராஸ் என டேய் போட்டு பேசியது பிரச்சனையாகி விட்டது. உடனடியாக உள்ளே புகுந்து விஜய் சேதுபதி கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து பர்ஃபார்ம் செய்து அர்னவை விளாசி எடுத்து விட்டார் என அர்னவ் ஆர்மியினர் விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அர்னவ் இன்ஸ்டாகிராமில் அலப்பறை: தர்ஷா குப்தா சுத்தி வளைத்து பேசாமல் நேரடியாக பாயிண்டாக பேசுங்கள் என அர்னவ் சொன்னதும், நீங்க சரியாதான் பேசுறீங்க, பேசுங்க என விஜய் சேதுபதி சொன்ன வீடியோவை ஷேர் செய்து அர்னவ் ராக்ட் விஜய் சேதுபதி ஷாக்ட் என ரசிகர்கள் பதிவிட்டதை ஷேர் செய்திருக்கிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி முழுவதும் ஜால்ராஸ் என ஆண்கள் அணியை சேர்ந்த தீபக், விஷால், அருண், சத்யா என அவர் சொன்ன வீடியோக்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவையே பகிர்ந்திருக்கிறார். வெளியே போயும் இவர் திருந்தவில்லை என்றும் விஜய் சேதுபதிக்கு செம பதிலடி என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications











