ஐ விழா: தனி விமானத்தில் சென்னை வரும் அர்னால்ட்!
நாளை மறுநாள் நடக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க, தனி விமானத்தில் வருகிறார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கும் ‘ஐ' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 15ம் தேதி நடக்கிறது.

ரஜினி
இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர் கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் புனித்ராஜ் குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

ரஹ்மான் இசை
விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் விக்ரம், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடனம் ஆடுகின்றனர். 15 ஆயிரம் பேர் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனி விமானத்தில்
விழாவில் பங்கேற்க அர்னால்ட் ஹாங்காங்கில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு நாளை காலை சென்னை வந்து சேர்கிறார். அவருடன் 8 பேர் கொண்ட குழுவினர் வருகிறார்கள்.

வரவேற்பு
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
அர்னால்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











