டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு

சென்னை: டெர்மினேட்டர் 2 ஆம் பாகத்தில் நடிக்க அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் சுமார் 15 மில்லியன் டாலர்கள். அந்தப் படத்தில் அவர் மொத்தமே 700 வார்த்தைகள் மட்டுமே பேசியிருப்பார். ஒரு வார்த்தைக்கு 21429 டாலர்கள் சம்பளமாக அளிக்கப்பட்டதை நினைத்து பார்த்தால் இப்பொழுதும் நமக்கு ஆச்சரியமாக உள்ளது.

1984ஆம் ஆண்டில் வெளியான டெர்மினேட்டர் படம் இன்றும் பல பாகங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. வசூலிலும் சாதனை படைத்து வரும் ஒரு ஹாலிவுட் திரைப்படம். டெர்மினேட்டர் என்று சொன்னாலே நமக்கு ஆணி அடித்தார் போல் நினைவுக்கு வருவது அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

Arnold got salary of $ 21429 per word Terminator 2 Movie.

அவரை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. சின்ன குழந்தைகளுக்கு கூட அவர் யார் என்பது தெரியும். இளவட்டங்கள் பல பேர் அர்னால்டு போல ஜிம் பாடி வேண்டும் என்று கடுமையாக ஒர்க் அவுட் செய்பவர்களும் உண்டு.

சலூன் கடைகளில் நுழைந்தவுடன் நம் கண்களுக்கு எப்படி நடிகைகளின் கிளு கிளு கவர்ச்சி படங்கள் தென்படுமோ, அதே மாதிரிதான், எந்த ஜிம்முக்கு சென்றாலும் அங்கு முதலில் நம் கண்ணில் படுவது அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் புகைப்படம் தான். அந்த அளவிற்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

டெர்மினேட்டர் 2 தி ஜட்ஜ்மெண்ட் டே படத்தில் இரண்டு இயந்திரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தான் கதை. ஒன்று நல்ல இயந்திரம் மற்றொன்று கெட்ட இயந்திரம். அதில் அர்னால்டு நல்ல இயந்திரமாக எப்படி மக்களை காப்பாற்றுகிறார் என்பது குறித்த படம்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 102 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் உருவான படம். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெளியான படம் என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது.

தற்போது 2019ஆம் ஆண்டில் டெர்மினேட்டர் டார்க் ஃபெட் எனும் 6ஆவது பாகம் வெளியாகியுள்ளது. ஒரே கதைக் கருவை வைத்து கொண்டு எத்தனை படம் தான் தயாரிப்பார்களோ தெரியவில்லை. இதுவரைக்கும் 6 பாகங்கள் வந்துவிட்டது. இன்னும் எத்தனை வரும் என்று கடவுளுக்கு தான் தெரியும்.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் ஒரு இயந்திரமாக வந்ததாலோ என்னவோ அதிகம் பேசியிருக்கமாட்டார். சுமார் 700 வார்த்தைகள் பேசியிருந்தாலே அது அதிகம். ஆனால் டெர்மினேட்டர் 2 ஆம் பாகத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் 15 மில்லியன் டாலர்கள்.

சராசரியாக பார்த்தால் ஒரு வார்த்தைக்கு 21,429 டாலர்கள். அடேங்கப்பா தலையே சுத்துதா. அமாம் அவருக்கு அந்த படத்தில் நடித்தற்கான சம்பளம் தான் அவ்ளோ. மனுஷன் எப்படி சம்பாதிச்சிருக்கான். கேக்கும் போது நமக்கு மயக்கம் வருது ஆனா அவரோட லெவெலே வேற என்று சொல்லும் அளவுக்கு அசராம இருக்காரு. வயசானாலும் அவரோட ஸ்டைலும் கம்பீரமும் குறையவே இல்ல. அதான் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X