கலிபோர்னியாவுக்கு வாங்க... விக்ரமுக்கு அழைப்பு விடுத்த அர்னால்டு!
ஐ படத்தில் சீயானின் நடிப்பை பார்த்து மெர்சிலானாவர்களில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் ஒருவர்.
அந்த அளவிற்கு தன் உழைப்பை அப்படியே கொட்டி கொட்டி அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் விக்ரம்.
ஐ படத்தில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து மிரண்டு போய் பாராட்டுகிறார்கள் பலரும்.

ஒரு போட்டோ முடியலையே
என்னதான் கெட்டப் போட்டாலும் தனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வரைக்கும் வந்த ஹாலிவுட் ஹீரோ அர்னால்டு ஸ்வாஸ்நெகருடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லையே என்ற கவலை விக்ரமுக்கு இருந்ததாம்.

கடிதம் எழுதிய சீயான்
இருந்தாலும் வந்தவருக்கு நன்றி சொல்வது கடமையாச்சே? ஒரு அழகான கடிதம் எழுதி அர்னால்டுக்கு அனுப்பி வைத்தாராம்.

கவலையோடு கடிதம்
அதில் ‘சென்னை வரைக்கும் வந்த உங்களுடன் ஒரு போட்டோ கூட எடுக்க முடியலையே' என்று இவர் கவலைப்பட, லெட்டர் போன வேகத்திலேயே ரிப்ளை வந்ததாம் விக்ரமுக்கு.

கலிபோர்னியா வாங்களேன்
‘அதுக்கென்ன? எப்ப கலிபோர்னியா வந்தாலும் என் வீட்டுக்கு வாங்க. உங்களுக்காக என் கதவு திறந்தேயிருக்கு' என்று அர்னால்டு எழுதி அனுப்ப, உற்சாகமாகியிருக்கிறார் விக்ரம். கோலிவுட்டில் இதுதான் இப்போதைய பேச்சாக உள்ளது.

சீக்கிரம் டிக்கெட் போடுப்பா...
ஒரு படத்தில் உழைப்பை கொட்டி முடித்து அந்த படம் வெளியானதும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள குடும்பத்தோடு வெளிநாடு பறக்கிற நடிகர்கள் லிஸ்டில் விக்ரமும் இருப்பதால், இந்த முறை அவரது ட்ரிப் கலிபோர்னியாவை நோக்கி இருந்தால் அதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்கின்றனர் அவரது ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











