முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார் அர்னால்ட் ஷ்வார்ஸநெக்கர்!
சென்னை: இன்று சென்னை வந்துள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.

ஷங்கர் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில், விக்ரம் - எமி ஜாக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அவர் வந்துள்ளார்.
அர்னால்ட் ஷ்வார்ஸநெக்கர் ஒரு நடிகர் மட்டுமல்ல. கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இரு முறை (2003 - 2011) பதவி வகித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று அவர் சந்தித்தார்.
பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications