twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஆஸ்கரைப் பாத்திருக்கேன், கோல்டன் குளோப் பாத்திருக்கேன்... 'ஐ' விழா மாதிரி பாத்ததில்ல- அர்னால்ட்

    By Shankar
    |

    பாராட்டுகிறாரா நக்கலடிக்கிறாரா என்று புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு நன்றிக் கடிதத்தை ஆஸ்கார் மூவீஸ் ரவிச்சந்திரனுக்கு அனுப்பியுள்ளார் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர்.

    ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கடந்த செப்டம்பர் 15ம் தேதி சென்னை வந்தார் அர்னால்ட்.

    ஆனால் விழாவில் நடந்த கால தாமதம், மற்றும் சொதப்பல்களால் பாடலை வெளியிடாமல் பாதியிலேயே, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டார் அர்னால்ட்.

    அமெரிக்கா போனபிறகு, நாகரீகம் கருதி ஐ விழா மற்றும் ஆஸ்கார் பிரதர்ஸுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதம்:

    சென்னைக்கு என்னை வரவழைத்து உபசரித்தமைக்கு நன்றி. மிகப்பெரிய வெற்றி இது.

    நான் இதுவரை கலந்து கொண்ட விழாக்களிலேயே சிறந்தது ஐ பட விழாதான். இதில் கலந்து கொண்டதற்காக பெருமைப்படுகிறேன்.

    நான் சென்னைக்கு வந்த நொடியிலிருந்து என்னை அக்கறையுடன் கவனித்துக் கொண்டது, உபசரித்த விதம் என்னை நெகிழ வைத்தது.

    Arnold praises Aascar Ravichandiran

    அந்த ஹோட்டல், அங்கு பரிமாறப்பட்ட சுவையான உணவுகள் எல்லாமே அருமை. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல அமைந்தது ஐ பட நிகழ்ச்சி. நானும் ஆஸ்கர் விருது விழாக்களைப் பார்த்திருக்கிறேன், கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்குப் போயிருக்கிறேன். வேறு எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒன்று, அவர்கள் எல்லாம், ஒரு தயாரிப்பை எப்படி மேடையில் கொண்டு வரவேண்டும் என்பதை உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    நிகழ்ச்சி கச்சிதமாக அமைந்தது. இந்தியாவின் வலிமையைக் காட்டியது. அந்த பாடி பில்டர்ஸ் ஷோ மனதைத் தொடுவதாக, மிக இயற்கையாக அமைந்தது. அதற்கு மேல் என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை. காரணம் நான் மேடையேற அதுவே சரியான தருணமாக அமைந்தது.

    அனைத்துக்கும் நன்றி. மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன்.

    -இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் அர்னால்ட்.

    English summary
    In a letter written by Arnold Schwarzenegger, he thanked Aascar Ravichandiran for his hospitality.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X