5.30 மணிக்கு இட்லி சாப்பிட்டு விட்டு 6 மணிக்கு எக்சர்ஸைஸ் செய்த அர்னால்டு!

சென்னை: ஐ பட விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்திருந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அதிகாலை ஐந்தரை மணியளவில் இட்லி சாப்பிட்டதாக அவர் தங்கியிருந்த ஹோட்டல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.

சென்னை வந்த அர்னால்டு உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்மிற்கு சென்றார். அங்கு அவர் நடிகர் சூர்யாவைச் சந்தித்தார்.

அதிகாலை டிபன்...

அதிகாலை டிபன்...

முன்னதாக ஹோட்டல் அறையில் அதிகாலை சுமார் ஐந்தரை மணியளவில் இட்லி, தோசை போன்றவற்றைச் சாப்பிட்டாராம் அர்னால்டு. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்தவர் பின்னர் 6 மணியளவில் ஜிம்மிற்கு சென்றாராம்.

ஆட்டோகிராப்...

ஆட்டோகிராப்...

அங்கு ஏற்கனவே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த சூர்யா,அர்னால்டைச் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். பின்னர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

ரொம்ப மகிழ்ச்சி...

ரொம்ப மகிழ்ச்சி...

இது தொடர்பாக சூர்யா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘நட்சத்திர ஓட்டலில் உடற்பயிற்சி கூடத்தில் அர்னால்டை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. என் முன்னால் அவர் நின்று கொண்டிருந்ததை நம்பவே முடியவில்லை

வெல்கம் டூ சென்னை...

வெல்கம் டூ சென்னை...

நான் மட்டுமின்றி எல்லோருமே அர்னால்டு ரசிகர்கள்தான். அவரை பார்த்து ‘வெல்கம் டூ சென்னை' என்றேன். சிரித்தபடி எனக்கு நன்றி சொன்னார்.

67 வயது நாயகன்...

67 வயது நாயகன்...

அர்னால்டுக்கு 67 வயது ஆகிறது. அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தார். சில மணி நேரங்களிலேயே ஜிம்முக்கு போய் விட்டார்.

ஆட்டோகிராப்...

ஆட்டோகிராப்...

என் உடல் எடை பயிற்சி, பாடி பில்டிங் எல்லாவற்றுக்கும் அர்னால்டுதான் உந்துதலாக இருக்கிறார். அவரிடம் ஆட்டோ கிராப் வாங்கினேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் யுனிவர்ஸ்...

மிஸ்டர் யுனிவர்ஸ்...

தனது 15 வயது முதற்கொண்டு தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் அர்னால்டு, 20 வயதில் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாடி பில்டிங் பற்றி நிறைய புத்தகங்களும் அவர் எழுதி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X