யெஸ்... செப்டம்பர் 15-ம் தேதி நான் சென்னைக்கு வர்றேன்!- அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர்

By Shankar

சென்னை: ஐ படத்தின் இசை வெளியீட்டுக்கு நான் சென்னைக்கு வருகிறேன், என்று அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர் வீடியோ பேட்டி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் ஐ. விக்ரம் - எமி ஜாக்சன் நடித்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள்.

Arnold Schwarzenegger confirms for Ai audio launch

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் 15-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

விழாவில் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இதனை வீடியோ பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார் அர்னால்ட். அதில், "ஹாய் இந்தியா... ஐ படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளதற்காக இயக்குநர் ஷங்கரை பாராட்டுகிறேன். செப்டம்பர் 15-ம் தேதி நடக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்கிறேன். சென்னை ரசிகர்களே... உங்களைச் சந்திக்க வருகிறேன்," என்று கூறியுள்ளார்.

விழாவுக்கான அழைப்பிதழை லாஸ் ஏஞ்சல்ஸ் போய் அர்னால்டை நேரில் சந்தித்துக் கொடுத்துவிட்டு வந்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தம்பி ரமேஷ் பாபு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X