தங்கைக்கு கல்யாண பரிசாக ரூ.16 கோடி வீட்டை பரிசளித்த சல்மான் கான்

By Siva

மும்பை: நடிகர் சல்மான் கான் தனது தங்கைக்கு திருமண பரிசாக ரூ.16 கோடி மதிப்புள்ள ஃபிளாட்டை அளித்துள்ளார்.

நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், அவரது காதலரான டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் சர்மாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள ஃபாலக்நுமா பேலஸில் செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. தனது திருமணம் திருவிழா போன்று நடக்க வேண்டும் என்று அர்பிதா எப்பொழுதோ சல்மானிடம் தெரிவித்துள்ளார். அதை நினைவில் வைத்து சல்மான் அர்பிதாவின் திருமணத்தை திருவிழா போன்றே நடத்தியுள்ளார்.

Arpita Khan's wedding: Salman gifts a terrace flat worth Rs.16 crore to sister

தங்கைக்கு திருமணப் பரிசாக மும்பையில் தனது வீட்டுக்கு அருகே ரூ.16 கோடி மதிப்புள்ள ஃபிளாட்டை அளித்துள்ளார் சல்மான். இது மட்டும் அல்ல ஃபாலக்நுமா பேலஸை 5 நாட்களுக்கு புக் செய்துள்ளார் சல்மான். அந்த இடத்தின் ஒரு நாள் வாடகை ரூ.1 கோடி ஆகும்.

திருமண விழாவில் சல்மானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைப் கலந்து கொண்டார். ஆனால் அவருடைய காதலர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது பெற்றோரை சல்மான் அழைக்கவில்லை.

இருப்பினும் ரன்பீரின் சகோதரி ரித்திமாவை சல்மான் அழைத்திருந்தார். ஆனால் அவரின் குழந்தைக்கு பள்ளியில் விடுமுறை அளிக்காததால் அவர் திருமணத்திற்கு வரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X