என்னை இனிமேல் படிச்சு தெரிஞ்சிக்கப் போறீங்க..: ஏஆர்.ரஹ்மான்!
ஏஆர் ரஹ்மான் பற்றிய புத்தகம் ஆன்லைன் புக்கிங் சூடுபிடித்துள்ளது
சென்னை: ஏஆர்.ரஹ்மான் பற்றிய புத்தகம் வெளியாக உள்ளது.
ரஹ்மான் என்றால் இசை, இசை என்றால் ரஹ்மான் என அறியப்பட்ட ரசிகர்களுக்கு ரஹ்மானைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நோட்ஸ் ஆப் எ ட்ரீம் என்ற தலைப்பில் ஏஆர்.ரஹ்மானின் வாழ்க்கையை கிருஷ்ணா திரிலோக் எழுதியுள்ளார். நாம் நேர்மையாகவும், நேர்மைறையான எண்ணங்களுடனும், இந்த உலகினால் அறியப்பட ஆசைப்படுகிறோம். அதை இப்போது நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருப்பவர் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான். அவர் பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என 24 வயதான கிருஷ்ணா திரிலோக் தெரிவித்திருந்தார்.
இப்புத்தகத்தில் ரஹ்மானின் பால்ய வயதிலிருந்து அவர் இசையில் ஆர்வம் ஏற்பட்டு கீபோர்ட் கற்றுக்கொண்டது, விளம்பர படங்களுக்கு இசையமைத்தது, பிறகு சினிமாவுக்குள் வந்ததிலிருந்து ஆஸ்கார் புகழ் என அனைத்தையுமே அடக்கியிருக்கிறார் கிருஷ்ணா திரிலோக்.
இந்த புத்தகம் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா என்ற நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. கேசட்டுகள் காலத்தில் ரஹ்மான் பாட்டு என்றால் எப்படி கேசட்டுகள் விற்றுத் தீர்ந்தனவோ, சிடிக்கள் விற்றதோ அதேபோல் புத்தகத்திற்கான முன்பதிவும் சூடுபிடித்துள்ளது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஏஆர்.ரஹ்மான், இத்தனை வருடங்களாக இசையின் வழியே என்னைத் தெரிந்துகொண்டீர்கள். இப்போது என்னைப் பற்றி படிப்பதன்மூலம், நான் யார் என்பதை தெரிந்துகொள்ளப் போகிறீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











