ஆரம்பம்... அதிரடி விளம்பரங்கள் ஆரம்பம்!

By Shankar

அஜீத் நடிக்கும் ஆரம்பம் படத்துக்கான அதிரடி விளம்பரங்களை முழு வீச்சில் ஆரம்பித்துள்ளார் தயாரிப்பாளர்.

இதன் மூலம் படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏஎம் ரத்னம்

ஏஎம் ரத்னம்

ஏ எம் ரத்னம்... ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் டாப் தயாரிப்பாளர் இவர். இந்தியன், காதலர் தினம், நட்புக்காக, ரன், தூள், குஷி, கில்லி, 7 ஜி ரெயின்போ காலனி என வரிசையாக ஹிட் படங்கள் தந்தவர். ஒரே நேரத்தில் நான்கு படங்களைத் தயாரித்தவர். ஆனால் கேடி, பொன்னியின் செல்வன், தர்மபுரி என அடுத்தடுத்த தோல்விப் படங்களும், பீமா படத்தில் மாட்டிக் கொண்டதும் அவரை எழ முடியாத அளவுக்கு முடக்கிவிட்டது.

கை கொடுத்த அஜீத்

கை கொடுத்த அஜீத்

இந்த நேரத்தில்தான் அவருக்கு கை கொடுக்க முன் வந்தார் அஜீத். இத்தனைக்கும் அவர் இதற்கு முன் ரத்னம் தயாரித்த எந்தப் படத்திலும் நடித்ததில்லை. இது ஏ எம் ரத்னத்துக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது.

விஷ்ணுவர்தன்

விஷ்ணுவர்தன்

இந்தப் படத்துக்கு முன் அஜீத் நடித்த பில்லா 2-ஐ இயக்குவதாக அறிவிக்கப்பட்டு திடீரென விலகிக் கொண்ட விஷ்ணுவர்தனை அழைத்து இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பைக் கொடுத்தார் அஜீத். கூடவே நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என நட்சத்திர மதிப்பும் கூடியது படத்துக்கு.

தலைப்பை சொல்லவில்லை...

தலைப்பை சொல்லவில்லை...

படம் ஆரம்பித்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தப் படத்தின் தலைப்பை மட்டும் வெளியிடவே இல்லை அஜீத் தரப்பு. ரசிகர்களும் மீடியாவும் வெறுத்துப் போகும் அளவுக்கு இழுத்து... ஒரு வழியாக கடந்த மாதம்தான் 'ஆரம்பம்' என அறிவித்தார்கள்.

தீபாவளி வெளியீடு

தீபாவளி வெளியீடு

இந்தப் படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தீபாவளிக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில் படத்தின் விளம்பரப் பணிகளை முழுவீச்சில் ஆரம்பித்துள்ளார் தயாரிப்பாளர் ரத்னம். இன்று முதல் நாளிதழ் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். அந்த டிசைன்கள்தான் இங்கே நீங்கள் பார்ப்பது...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X