50வது நாள் வெற்றியை கொண்டாடும் அஜீத்தின் 'ஆரம்பம்'
சென்னை: அஜீத்தின் ஆரம்பம் படம் ரிலீஸாகி வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்டோர் நடித்த ஆரம்பம் படம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி ரிலீஸ் ஆனது. அதனால் அஜீத்தின் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி தல தீபாவளியாக அமைந்தது.
படம் வெற்றி பெற இளையதளபதி விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல வசூல்
ஆரம்பம் தமிழகம், கர்நாடகம் தவிர வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளியது. மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

50வது நாள்
படம் ரிலீஸாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது. ஆரம்பம் இந்தியா தவிர மலேசியா மற்றும் இலங்கையிலும் 50வது நாளாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

புது வரவுகள்
ஆரம்பம் ரிலீஸ் செய்யப்பட்டதற்கு பிறகு கடந்த ஒரு மாதத்தில் பல படங்கள் ரிலீஸான போதும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'தல' ஷோ
படத்தின் கதை பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் படத்தை அஜீத் குமார் தனது நடிப்பால் தாங்குகிறார் என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர். ஆரம்பம் படத்தை அடுத்து ரிலீஸான விஷாலின் பாண்டிய நாடு படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











