8 ஆண்டுகளை கடந்த அஜித்தின் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் ஆரம்பம்!
சென்னை : தல அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்சி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 2013 ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான படம் ஆரம்பம்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் படம் முழுக்கவே ஸ்டைலிஷ்ஷான அஜித்தை இந்தப் படத்தில் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இந்தப் படம் தற்போது ரிலீசாகி 8 ஆண்டுகளை கடந்துள்ளது.

தல அஜித்தின் ஆரம்பம்
தல அஜித்தின் அல்டிமேட் படங்களில் ஒன்றாக தற்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் ஆரம்பம். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். கடந்த 2013 அக்டோபர் 31ம் தேதி இந்தப் படம் ரிலீசானது. தற்போது 8 ஆண்டுகளை இந்தப் படம் கடந்துள்ளது.

ஸ்டைலிஷ் அஜித்
படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி மற்றும் ராணா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படத்தின் ஆரம்பம் முதலே ஸ்டைலிஷ்ஷான அஜித்தை படம் நெடுகிலும் காண முடிந்தது. படத்தில் அவருக்கு மட்டுமின்றி நயன் உள்ளிட்டவர்களுக்கு பஞ்ச் டயலாக்கை வைத்து தனிக்கவனம் பெற்றார் இயக்குநர்.

ஆக்ஷன் த்ரில்லர் படம்
அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பேராசையால்தான் நாட்டில் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன என்ற கதைக்கருவை மையமாக கொண்டு ஊழலை எதிர்த்து போராட அஜித், ஆர்யாவுடன் இணைந்து செய்யும் செயல்களை ஆக்ஷன் த்ரில்லராக முன்னெடுத்து சென்றது ஆரம்பம்.

அஜித் அதிரடி
ஊழலால் தன்னுடைய உயிர் நண்பனை இழக்கும் அஜித், அதற்காக எடுக்கும் அதிரடி முடிவுகளை இந்தப் படம் காட்சிப்படுத்திய வகையில் சிறப்பாக அமைந்தது. அஜித்தின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. அஜித்தை அழகாகவும் ஸ்டைலாகவும் காட்டிய வகையில் படம் அவரது ரசிகர்களிடையே கவனம் பெற்றது. யுவனின் இசையில் பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன.

ஆர்யா சிறப்பு
ஆர்யாவை வைத்து ஊழல் பெருச்சாளிகளை அவர்களது திட்டங்களை தவிடுபொடியாக்கும் அஜித்தின் முயற்சிகளை சிறப்பாக காட்சிப் படுத்தியிருந்தார் விஷ்ணுவர்தன். அவரது நண்பராக ராணா சிறிது நேரமே வந்தாலும் கவனம் பெறுவார். அதேபோல ஆர்யாவும் காமெடி கலந்த சிறப்பான நடிப்பை படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

8 ஆண்டுகள் நிறைவு
இத்தகைய பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்த ஆரம்பம் படம் வெளியாகி தற்போது 8 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த சமயத்தில் படத்தின் நினைவுகளையும் அதன் வெற்றியையும் படக்குழு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ரசிகர்களும் இதன்மூலம் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











