கர்நாடகத்தில் தீபாவளிக்கு அஜீத் படம் ரிலீஸ் ஆகாது!

By Shankar

பெங்களூரு: மைசூர் மற்றும் மாண்டியாவில் அஜீத்தின் ஆரம்பம் படத்தை முதல் வாரம் திரையிடுவதில்லை என அம்மாநில விநியோகஸ்தர் முடிவு செய்துள்ளார்.

வரும் 31-ம் தேதி ஆரம்பம் படம் உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படம் கர்நாடகத்திலும் வெளியாகிறது.

ராஜ்யோத்சவா

ராஜ்யோத்சவா

ஆனால் வரும் நவம்பர் 1-ம் தேதி அந்த மாநிலத்தில் ராஜ்யோத்சவா எனும் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னட மக்களுக்காக கர்நாடக மாநிலம் உருவான தினம் இது. உலகம் எங்கும் உள்ள கன்னட மக்கள் இந்த நாளை கிட்டத்தட்ட தேசிய தினம் என்கிற அளவுக்கு கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் தீபாவளி ரிலீஸ் மாதிரி புதுப் படங்களும் ரிலீஸ் ஆகும். அரசு விடுமுறை வேறு.

தமிழர் பகுதிகளில்

தமிழர் பகுதிகளில்

இந்த ஆண்டு ராஜ்யோத்வா நிகழ்ச்சியையொட்டி தீபாவளியும் வந்துவிட்டது.

ராஜ்யோத்சவ தினத்தில் பொதுவாகவே கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர் பகுதிகளில் கொஞ்சம் பதட்டமாக இருக்கும். காரணம், காவிரிப் பிரச்சினையை காரணமாக வைத்து ஏதாவது கலாட்டா நடக்கும்.

ஆரம்பம் இல்லை

ஆரம்பம் இல்லை

இந்த ஆண்டு ராஜ்யோத்வா நாளில் அஜீத்தின் தமிழ் பட வெளியீடும் இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, தமிழர்கள் பகுதியில் அந்தப் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

2 வாரங்கள் கழித்துதான்

2 வாரங்கள் கழித்துதான்

கர்நாடகத்தில் இந்தப் படத்தை நவம்பர் 2-ம் தேதிதான் வெளியிடுகிறார்கள். அதுவும் மைசூர், மாண்டியா போன்ற தமிழர் மாவட்டங்களில் 2 வாரங்கள் கழித்தே இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கர்நாடகம் மற்றும் பெங்களூரில் வாழும் தமிழர்கள் - அஜீத் ரசிகர்கள் தீபாவளிக்கு அஜீத் படத்தைப் பார்க்க முடியாது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X